வியாழன், 9 ஏப்ரல், 2015

அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

தங்களது பிள்ளைகள் மெட்ரிக் பள்ளிகளில் படிப்பதையே பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புவதும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எவ்வளவுதான் கஷ்டப்பட்டுப் படித்தாலும் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாமல் போவதும் தனியார் பள்ளிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது.சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை மிகவும் எளிதாகப் பெற்றுவிடுவதற்கான காரணம், இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இதற்கு கல்வித் துறை உயர் அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பது வெட்கக்கேடு.


தனியார் பள்ளிகளில் தேர்வு மையங்களை ரத்து செய்து, அரசுப் பள்ளிகளில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும் என்பது நல்ல யோசனை. இதை அரசு கவனத்தில் கொண்டு, மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்போது, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அ. அப்துல் ரஹீம், காரைக்குடி.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக