வியாழன், 16 ஏப்ரல், 2015

காதல் வலையில் சிக்கி, வீட்டை விட்டு ஓடும் மாணவியர்

பள்ளி பொதுத் தேர்வு முடிந்துள்ள நிலையில், காதல் வலையில்சிக்கி, வீட்டை விட்டு ஓடும் மாணவியர்
எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 25மாணவியர் மாயமாகி உள்ளனர். கிருஷ்ணகிரி, கல்வியில் பின்தங்கிய மாவட்டம்.
குறிப்பாக பெண் கல்வி சதவீதத்தில், மாநில சராசரியைவிட குறைவாக உள்ளது. பொருளாதார ரீதியில்,
பின்தங்கியிருப்பதால், படிக்கும் வயதிலேயே,குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதும் அதிகமாக
உள்ளது.உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவு என்பதாலும், சினிமா, 'டிவி' உள்ளிட்டவை, பள்ளி மாணவியரை ஹீரோயினாக்கி விடுவதால், 'ரோமியோ'க்கள், பள்ளிகளை முற்றுகையிட துவங்கி
விடுகின்றனர். மொபைல் போன் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப சாதனங்கள் உதவியுடன், பள்ளிப் பருவம்
முடிவதற்குள், 'காதலை' வளர்த்துக் கொள்கின்றனர்.பள்ளிப் படிப்பை முடித்தவுடன், பெண் குழந்தைகளை,
உயர்கல்விக்கு அனுப்பாமல், பல குடும்பத்தினர், திருமணம் நடத்துவதில் குறியாக உள்ளனர். இவற்றையெல்லாம்கணக்கில் கொண்டு, தேர்வு முடிந்தவுடன் மாணவியர், 'காதலனோடு' ஓட்டம் பிடிப்பது அதிகரித்துவருகிறது. நடப்பு கல்வியாண்டில் இதைத் தடுக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தேர்வு மையங்களையொட்டியபகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். சந்தேகத்துக்கு இடமாக சுற்றித் திரிந்த வாலிபர்களைவிசாரித்து விரட்டியடித்தனர்.
ஆனாலும், தேர்வு முடிந்த ஒரு வாரத்துக்குள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில்மட்டும், 25க்கும் மேற்பட்ட மாணவியர், குறிப்பாக, 10ம் வகுப்பு தேர்வு எழுதியோர் மாயமாகி உள்ளதாக புகார்
பதிவாகியுள்ளது. போலீஸ் விசாரணையில், பெரும்பாலான மாணவியர், காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு, இது போன்று காணாமல் போன மாணவியர் எண்ணிக்கை, 17. இந்த ஆண்டு, 25 ஆக
அதிகரித்துள்ளது. இந்த புள்ளி விவரம், போலீசில் பதிவு செய்யப்பட்ட புகார் அடிப்படையிலானது. போலீசில்புகார் செய்யாத குடும்பத்தினர் பலர், தனிப்பட்ட முறையில் தேடி வருவதும் நடந்து வருகிறது.

போலீசார் கூறியதாவது: காதல் என்ற பெயரில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவியர் ஓட்டம் பிடிப்பது அதிகரித்து வருகிறது. பல ரோமியோக்கள், பள்ளி மாணவியரை இலக்காக கொண்டு உள்ளனர். வாழ்க்கை குறித்த எவ்வித தெளிவும் இல்லாமல், சில நாளிலேயே, இந்த காதல் முடிவுக்கு வந்து விடுகிறது. பலரும்,மாணவியரை விட்டு ஓடி விடுகின்றனர். பெற்றோர், குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். நடவடிக்கையில் சந்தேகம் இருந்தால், விசாரித்து அறிய வேண்டும். இவ்வாறு ஓட்டம் பிடிக்கும் மாணவியரில், 90 சதவீதம் பேர், சில நாட்களிலேயே கைவிடப்படுகின்றனர்.
மாணவியருக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக