ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

1,400 சிறப்பாசிரியர் பணியிடங்களை போட்டித்தேர்வு மூலமாக நிரப்ப அரசு முடிவு-அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.


அரசு பள்ளிகளில் ஏறத்தாழ 1,400 சிறப்பாசிரியர்கள் (தையல், ஓவி யம், உடற்கல்வி) போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளிலும், மாநக ராட்சிப் பள்ளிகளிலும் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர்கள் முன்பு பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படை யில் நியமிக்கப்பட்டு வந்தனர். தொடக்கத்தில் மாவட்ட அளவி லான பதிவுமூப்பும், அதன்பிறகு மாநில அளவிலான பதிவுமூப்பும் பின்பற்றப்பட்டன.

கடந்த 2012-13-ம் கல்வி ஆண்டுக்கான சிறப்பாசிரியர் பணியிடங்களில் 782 காலியிடங் களை மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 8.5.2013 அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான தற்காலிக தெரிவு பட்டியலும் தயாரான நிலையில், வெறும் பதிவுமூப்பு அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்களை நியமிக் கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த 9.6.2014 அன்று உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து, சிறப் பாசிரியர்களை போட்டித்தேர்வு மூலம் நியமிக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 17.11.2014 அன்று ஓர் அரசாணையை வெளி யிட்டது. அதன்படி, மொத்தமுள்ள 100 மதிப்பெண்ணில் 95 மதிப் பெண்ணுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எஞ்சிய 5 மதிப் பெண், கூடுதல் கல்வித்தகுதி, பணிஅனுபவம், என்சிசி, என்எஸ்எஸ் செயல்பாடு போன்ற வற்றுக்கு ஒதுக்கப்படும்.

இந்த நிலையில், 440 உடற்கல்வி ஆசிரியர்களையும், 196 ஓவிய ஆசிரியர்களையும், 137 தையல் ஆசிரியர்களையும், 9 இசை ஆசிரியர்களையும் (மொத்தம் 782 காலியிடங்கள்) மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வுசெய்யும் வகையில் கடந்த 8.5.2013 அன்று வெளியிட்ட அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு திரும்பப்பெற்றுள்ளது. சிறப்பாசிரியர்களை போட்டித்தேர்வு மூலம் நியமனம் செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ரத்துசெய்யப்பட்ட அந்த அறிவிப்பின் மூலம் நியமிக்கப்பட இருந்த 782 காலியிடங்களும் 2012-13-ம் கல்வி ஆண்டுக்கான காலியிடங்கள் ஆகும். தற்போது, 2013-14, 2014-15, 2015-16 ஆகிய 3 கல்வி ஆண்டுகளுக்கும் சேர்த்து கணிசமான காலியிடங்கள் வந் துள்ளன.

இந்த 3 கல்வி ஆண்டு களுக்கான புதிய காலியிடங்கள் மற்றும் முந்தைய பழைய 782 காலியிடங்களைச் சேர்ந்து ஏறத்தாழ 1,400 சிறப்பாசிரியர் பணியிடங்களை ஒரே போட்டித்தேர்வு மூலமாக நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக