செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

TRB PG TAMIL:முத்தொள்ளாயிரம் -பெண்பாற் கைக்கிளை

கைக்கிளை 

கைக்கிளை என்பது ஒருதலைக் காமம்கை-சிறுமைகிளை-உறவுஅதாவது இருபாலருள் ஒருவரிடத்தே மட்டும் தோன்றிய மனத்தின் அன்புநெகிழ்ச்சிஇயற்பெயர் சார்த்திக் கூறப்படும் புறத்திணைக் கைக்கிளைஇது ஆண்பாற்கைக்கிளைபெண்பாற் கைக்கிளை என இருவகைப்படும்.இவற்றில் இங்கு இடம் பெறுவன எல்லாம் புறத்திணைச் சார்பான பெண்பாற் கைக்கிளை ஆகும்பாண்டியன் (24-61) சோழன் (75-107) சேரன்(117-130என்ற பாடல்களின் எண்ணிக்கையில் அதிக அளவு கை;கிளை பற்றிய பாடல்கள் இடம் பெறுவதைக் காணலாம்.

 

தலைவி உலாவரும் மன்னனைக் கண்டு காதல் கொள்கின்றாள்இதனால் தலைவியின் மனத்தில் ஏற்படும் காதல் உணர்வையும்வருந்தும்நிலையையும் அதன் மூலம் மூவேந்தர்களின் சிறப்பினையும் ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளனர்மன்னனின் மீது காதல் கொள்ளும் பெண்கள்பலவாறாகச் சுட்டப்படுள்ளனர்காட்சிவேட்கைமெலிதல்ஒரு தலையுள்ளல்ஆக்கஞ் செப்பல்நாணுவரை இறத்தல்நோக்குவ எல்லாம்அவையே போறல்மறத்தல்மயக்கம்சாக்காடு என்ற இப்பத்து நிலையையும் ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார் எங்கும் நிறைந்த தோன்றாததுணைவனாகிய இறைவனிடத்துத் தாங்கொள்ளும் அன்பினை வளர்த்தற் பொருட்டு அவனைத் தலைவனாகவும் தம்மைத் தலைவியாகவும்கொண்டு பாடுவது மரபு இங்கு தோன்றாத்துணையாக கருதப்படும் இறைவனைதோன்றுந் துணைவனான மன்னனோடு ஒப்புமையாகக் கருதிக்கொண்டு தலைவி பலவாறாகப் புலம்புகிறாள்
 

பாண்டியன் 
 

பாண்டிய மன்னனிடம் உள்ளம் பறிகொடுத்த பெண் பாண்டிய மன்னன் வந்த பொன் தேரை இழுத்துச்சென்றக் குதிரையின் குழம்புகள் பதித்தபள்ளத்தில் உள்ள புழுதியை எடுத்து நெற்றியில் பூசுகிறாள்தலையில் சூடுகிறாள்மேனியில் தேய்த்து மகிழ்கிறாள். (முத். 103) மண்ணுயிர்க்காக்கும் வேந்தன் தன்னிடம் பாராமுகமாய் இருப்பதால் பால் ஒருவருக்கும்நீர் ஒருவருக்கும் தரும் பாரபட்சத் தாய்போல் மன்னன் திகழ்வதாய்ப்பழிக்கின்றாள் (முத்136)

 

தளைய விழும் பூங்கோதைத் தாயரே ஆவி

களையினும்என் கைதிறந்து காட்டேன் - வளைகொடுப்போம்

வன்கண்ணன் வாண்மாறன் மால்யானை தன்னுடன் வந்து

என் கண் புகுந்தான் இரா. (முத்38) 
 

எனத் தலைவி இரவில் பாண்டியன் பெரிய பட்டத்து யானையுடன் வந்து என் கண்ணுள் புகுந்தான்கட்டு நீங்கி மலரும் பூமாலையணிந்தசெவிலித்தாய்மார்களேஎன் கண்ணுள் புகுந்துள்ள தலைவனை என் ஆவி நீங்கினாலும் கண்களை மூடியுள்ள கைகளைத் திறந்து காட்டமாட்டேன் எனத் தலைவி கூறியுள்ளாள்மற்றொரு தலைவியோ பாண்டிய மன்னனை சுமந்து செல்லும் பெண் யானையிடம் மன்னனை நன்குபார்ப்பதற்காக மெதுவாகச்செல் பிடியே என வேண்டுகிறாள். (முத்100, 101, 102)

 

சோழன் 

சோழ நாட்டுப்பெண் சோழ மன்னனிடம் வாடைக்காற்றை (முத் 51) நெஞ்சை (முத் 49) தூதாக அனுப்புகின்றாள்சோழமன்னனைப் பிரிந்துதவிக்கும் தவிப்பு வலையிடைப்பட்ட மீன்போல் உள்ளது. (முத். 35)

 

செங்கால் மடநாராய்தென்னுறந்தை சேறியேல்

நின்கால் மேல் வைப்பன் என் கையிரண்டும் - நன்பால்

கரை உறிஞ்சி மீன் பிறழும் காவிரி நீர் நாடற்கு

உரையாயோ யான்உற்ற நோய் (முத்95) 

தலைவி காமமிக்க கழிபடர் கிளவியால் கேளா புள்ளினத்தைக் கேட்பனவாகக் கருதிசிவந்த கால்களும் இளமையும் பொருந்திய நாரையோ!தெற்கில் உள்ள உறையூரை அடைவாயேயானால் என் இரு கைகளையும் நின் கால்களின் மேல் வைத்து வணங்குவேன்நுல்லிடமாகிய கரையில்மீன்கள் கரைமோதி பிறழ்ந்து செல்லும் காவிரி நீர் வளம் பொருந்திய சோழ நாடானாகிய சோழ வேந்தனுக்கு யான் அடைந்த காதல் நோயைப்பற்றிச் சொல்ல மாட்டாயோஎன்று தலைவி கூறுகின்றாள்சோழனைச் சுமந்து செல்லும் பெண்யானை விரைவாகச் செல்வதால் தலைவிஅதனைப் பழிக்கின்றாள். (முத்134) இவ்வாறாக தலைவியன் ஒரு தலைக் காதல் உணர்வினை ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார்

சேரன் 

சேர நாட்டில் தலைவி சேரனின் உலாக் கண்டபின் தன்மனம் அரண்மணை வாயிலில் காத்து நிற்பதாக கூறுகின்றாள். (முத்17)

 

தலைவி தோழியிடம் தன்தாய் தன்னை வீட்டுக்குள் அடைத்து வைப்பதன் வாயிலாக தன் உடலை மட்டுமே காவலில் வைக்க முடியும் என்றும்மனமோ அரசன் பின்னே சென்றுவிட்டது என்றும் கூறுகின்றாள்.

 

காதல் நோயும்கண்டிக்கும் தாயும்

 

நாட்டை ஆளும் மன்னன் நல்லவன்வீரத்தில் வல்லவன்பேரழகன்அவன் வீதியிலே பவனிவரும்போது அவனைக் காணவும்அவனது அழகைஇரசிக்கவும்இளம்பெண்கள் தத்தம் வீடுகளிலேயிருந்து வெளியே வருவார்கள்அப்படி வருகின்ற சமயத்திலேமன்னன்மீது தன் பிள்ளை காதல்கொண்டுவிட்டால் நிறைவேறாது போய்விடக்கூடிய அந்தக் காதலால் தன்மகளின் வாழ்வு பாழாகிப்போய்விடுமே என்ற அச்சத்தால் மன்னனைப்பார்க்கவிடாது தாய் தடுப்பாள்இது இளம்பெண்கள் இருக்கும் இல்லங்களில் சாதாரணமாக நடைபெறுவது வழக்கம்இதுபற்றிமுத்தொள்ளியிரத்தில் உள்ள ஒரு பாடல் வருமாறு

தாயர் அடைப்ப மகளிர் திறந்திட

தேயத் திரிந்த குடுமியவே – ஆய் மலர்

வேண்டுலாஅம் கண்ணி வயமான்தேர்க் கோதையைக்

கண்டுலாஅம் வீதிக் கதவு (முத்.10)

வண்டுகள் மொய்க்கின்ற மலர்மாலைகளை அணிந்துகொண்டு சேரமன்னன் தேர்மீது அமர்ந்த தெருவிலே பவனி வருகின்றான்அவனைக் காணும்ஆர்வத்தில் இளம்பெண்கள் தங்கள் வீடுகளுக்குள்ளிருந்து வெளிப்பட்டு வாசலுக்கு வர முயல்கிறார்கள் தம்பிள்ளைகள் மன்னனைக் கண்டால்மன்னனம்மேல் காதல் கொண்டுவிடுவார்களே என்று கவலைப்பட்ட அவர்களின் தாய்மார்வெளிக்கதவைப் பூட்டிவிடுகின்றார்கள்தாய் கதவிற்குத்தாழ்ப்பாள் போட்டுவிட்டு அப்பால் சென்றதும்மகள் மீண்டும் கதவைத் திறக்க முற்படுகின்றாள்அதைக்கண்ட தாய் ஓடிவந்து மறுபடியும் கதவைநன்றாகப் பூட்டிவிடுகின்றாள்மகள் திரும்பவும் திறக்கின்றாள்தாய் பூட்டுகின்றாள்மகள் திறக்கின்றாள்இப்படியாக இளம் பெண்களும்அவர்களின் தாய்மாரும்கதவுகளைத் திறப்பதும்பூட்டுவதுமாக இருந்ததால் கதவின் பூட்டில் உள்ள குமிழ்கள் தேய்ந்துபோகின்றனஇதுதூன்பாடலின் பொருள்.

 

காலத்தால் பழசாகிபயன்பாட்டால் பழுதாகி பூட்டுக் குமிழ்கள் தேய்வது வழமைஇங்கோ காதலால் குமிழ்கள் தேய்வதாகச் சொல்லப்பட்டிருப்பதுஎவ்வளவு அருமை!

 

காதல்வயப்பட்ட கன்னி ஒருத்திக்கும் அவளது தாய்க்கும் நடக்கும் போரட்டத்தை இன்னும் ஒரு பாடல் மிகவும் சுவையாகச் சித்தரிக்கின்றது.

 

கடல்தானைக் கோதையைக் காண்கொடாலள் வீணில்

அடைத்தாள் தனிக்கதவம் அன்னை அடைக்குமேல்

ஆயிழையாய் என்னை அவன்மேல் எடுத்துரைப்பார்

வாயும் அடைக்குமோ தான்  (முத்14)

 

கடல் போன்ற மிகப்பெரிய படையினைக்கொண்ட மன்னனைப் பார்க்கவிடாமல் என்னைத் தடுத்து ஒரேயொரு வெளிக்கதவையும் மூடிவிடுகிறாள்எனது தாய்ஆனால்அழகிய நகைகளை அணிந்துள்ள என் தோழியேஅந்த மன்னன்மேல் நான் காதல் கொண்ட விடயம் ஊர்மக்கள்எல்லோருக்கும் தெரியும்அவர்கள் மன்னனிடம் சென்று என் காதலைப்பற்றிச் சொல்வார்கள்அதைத் தடுக்க அவளால் முடியுமாஎன்றுதோழியிடம் கேட்பதுபோல இந்தப்பாடல் அமைந்துள்ளதுவீட்டுக்குள் என்னைப் பூட்டி வைத்துவெளிக்கதவை அடைத்துவிடத்தான் முடியும்.ஊர்வாயை அடைக்க உன்னால் முடியுமாஎன் காதல் மன்னனிடம் சென்று சேர்வதைதத் தடுக்க உன்னால் முடியுமாஎன்று தாய்க்குவிடுக்கப்படுகின்ற கேள்விக்கணைதான் அதுஅந்தக்கேள்வி அவள் அரசன்மேல் வைத்துள்ள காதலின் ஆழத்தை நன்கு உணர்த்துகின்றது.

 

இளம் பெண்களின் இதயத்தில் எழுகின்ற காதல் அவர்களைப் படுத்தும் பாட்டை மற்றும் ஒருபாடல் வேறொரு கோணத்தில் புலப்படுத்துகின்றது.

 

வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும்

நிரைபொரு வேல் மாந்தைக் கோவ!-நிரைவளையார்

தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார்

செங்கோலன் அல்லன் என (முத்11) 

முத்தொள்ளாயிரம் சேரன்சோழன்பாண்டியன் ஆகிய மூவேந்தர்களின் வீரத்தைபோர்த்திறனைபடைச்சிறப்பைதிரைகொள்ளும்விதம்,கொடை போன்றவற்றை கற்பனைச் சுவையுடன் நம்முன் விவரித்து உரைக்கின்றதுகைக்கிளைப் பாடல்களாக தலைவியர் மூவேந்தர்களின்உலாவினைக் கண்டு உள்ளம் பறிகொடுத்து புலம்பும் புலம்பல் சுவையாக உள்ளன

பண்டையத் தமிழ் இலக்கியங்கள் என்றாலே படிப்பதிலும் படித்ததை எண்ணிக் கழிப்பதிலும் ஏற்படும் சுவையே தனியானதுதான்நமக்குகிடைத்துள்ள இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் தேனில் தோய்த்தெடுத்த பலாச்சுவைப்போல் இனிமையானதுபக்க எல்லைக்கருதி ஒருசிலப்பாடல்கள் மட்டும் இக்கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளனமுத்தொள்ளாயிரத்தில் வீரமும் காதலும் போட்டிப் போட்டுக்கொண்டு கற்பனைவளத்துடன் படைக்கப்பட்டுள்ளன.

 

இவ்வாறாக மூவேந்தர்களின் ஆட்சியில் காணப்பட்ட தொன்மைக் கூறுகளையும் பண்டைய மக்களின் வாழ்வியலையும் விளக்கியுள்ளன.முத்தொள்ளாயிரம் மூவேந்தர்களின் சிறப்பினையும்வீரத்தையும் நாட்டு வளத்தையும்தலைவியின் ஒருதலைக் காதலையும் இந்நூலின்வழிசுவைக்கமுடிகிறது
 

 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக