வியாழன், 26 நவம்பர், 2015

பதின்பருவத்தினர் மதுபோதையால் ஈர்க்கப்பட குடும்பச் சூழலும், சினிமாவுமே காரணம்

பதின்பருவத்தினர் மதுபோதையால் ஈர்க்கப்பட குடும்பச் சூழலும், சினிமாவுமே காரணம் என உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் திருச்செங்கோடு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயின்ற 4 மாணவிகள் மது அருந்திவிட்டு தேர்வு அறைக்கு வந்ததாக பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர்.

கடந்த 21-ம் தேதி நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியின் உளவியல் துறைத் தலைவர் எஸ்.நம்பி 'தி இந்து'விடம் கூறும்போது, "இளம் பதின்ம வயதில் மதுபோதையால் ஈர்க்கப்படுபவர்கள் தங்கள் பெற்றோர் குறிப்பாக தந்தை மது அருந்துவதை நேரில் பார்த்திருப்பர். அதன் விளைவாக அவர்களுக்கு மது போதை மீதான ஆர்வமும், அதை அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும்.

இதுதவிர திரைப்படங்களில் கட்டமைக்கப்படும் சில காட்சிகளும் மது அருந்துவதை ஊக்குவிப்பதாக உள்ளன. மகிழ்ச்சி, வெற்றியைக் கொண்டாடவும், துக்கத்தை மறக்கவும் மது அருந்துவதே தீர்வு என்பதுபோல் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. இவை பதின்பருவத்தினர் மனதில் ஆழமாகப் பதிகிறது.

சில வீடுகளில் தந்தை மகனை மதுக்கடைக்கு அனுப்பி மது வாங்கிவரச் சொல்லும் நிகழ்வுகள் நடக்கின்றன. இவ்வாறு செய்யும்போதும் அந்தக் குறிப்பிட்ட பதின்ம வயதுச் சிறுவனுக்கு மது மீது ஆர்வம் ஏற்படுகிறது.

இத்தகைய சூழல்களால் பதின்ம வயதினருக்கு மது மீது ஈடுபாடு ஏற்படுகிறது. அதன் விளைவாக வாய்ப்பு கிடைக்கும்போது மது அருந்துவதில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

பதின்ம வயதிலேயே மது போதைக்கு அறிமுகமாவதால் உளவியல், உடல் ரீதியாக கடும் விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரும். அதுமட்டுமல்லாமல், பள்ளி மாணவ, மாணவிகள் என்றால் அவர்கள் படிப்பும் பாதிக்கப்படும்." என்றார்.

சவீதா பல்கலைக்கழக உளவியல் துறைத் தலைவர் ஜி.எஸ்.சந்திரலேகா கூறும்போது, "குடும்பச் சூழலே பெரும்பாலும் பதின்ம வயதினர் மது போதை வழியில் செல்லத் தூண்டுகிறது. பெண் பிள்ளைகள் இத்தகைய செயலில் ஈடுபடும்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சினை இருமடங்காக இருக்கிறது" என்றார்.



 

ஏற்கனவே அறிவித்தபடி அரையாண்டுத் தேர்வு

அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, கிறிஸ்துமஸ்
விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள்
விடுமுறை அறிவிக்கப்பட்டு, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
விடுமுறையால் அரையாண்டுத் தேர்வு தேதியை ஒரு வாரம் தள்ளி வைத்து, விடுமுறை நாட்களைக் குறைக்க அதிகாரிகள் ஆலோசித்தனர். ஆனால், விடுமுறையை ரத்து செய்யக் கூடாது என,
பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்ததால், அரையாண்டுத் தேர்வை திட்டமிட்டபடி நடத்த, அனைத்து
பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.நேற்று மாலை அவசர, அவசரமாக பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம்பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, ஏற்கனவே அறிவித்த படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு டிச., 7ம் தேதியும்; 10ம் வகுப்புக்கு டிச., 9ம் தேதியும், மாற்றமின்றி தேர்வு நடத்தி முடிக்க வேண்டும்.
இதேபோல், சமச்சீர் கல்வி பாடத் திட்டப்படி, 9ம் வகுப்புக்கு டிச., 9ம் தேதியும், 6 முதல், 8ம் வகுப்புகளுக்கு,டிச., 14ம் தேதியும் இரண்டாம் பருவத் தேர்வுகளை நடத்த வேண்டும். அனைவருக்கும் டிச., 22ல் தேர்வுகள்முடிக்கப்படுகிறது. இதையடுத்து, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான தொடர் விடுமுறை அறிவிக்கப்படும் எனஅதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 தேர்வு தேதிகள்குறித்த அறிவிப்பு அடுத்த வாரம்?

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 2016 மார்ச்சில், பொதுத்தேர்வு நடத்தப்பட
வேண்டும்; ஏப்ரலில், சட்டசபை தேர்தல் வருவதால், பிப்., 29ம் தேதி தேர்வுகளை துவங்க,
பள்ளிக்கல்வித் துறைதிட்டமிட்டு உள்ளது. இதன்படி, பொதுத்தேர்வுக்கான இறுதி வினாத்தாள்
தேர்வு பணி நடக்கிறது. ஆனால், எதிர்பாராத மழையால், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை
விடப்பட்டு, அரையாண்டுத் தேர்வு கேள்விக்குறியாகி உள்ளது.இச்சூழலில், மார்ச் 31ம்
தேதிக்குள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, குறுகிய இடைவெளியில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, மூன்று தேதிகளை, தேர்வுத் துறை பரிந்துரை செய்துள்ளது. தேர்வு தேதிகள்குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகலாம் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த, குழு ஒன்றை, மத்திய நிதியமைச்சகம் நியமித்து உள்ளது

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த, குழு ஒன்றை, மத்திய
நிதியமைச்சகம் நியமித்து உள்ளது.ஓய்வுபெற்ற நீதிபதி, ஏ.கே.மாத்துார் தலைமையிலான, ஏழாவது
ஊதியக்குழு, தன் பரிந்துரைகளை, மத்திய நிதியமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதில், மத்திய
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு, 23 சதவீத ஊதிய உயர்வு வழங்க
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த,
அமல்படுத்தும் குழு ஒன்றை, மத்திய நிதியமைச்சகம் அமைத்துள்ளது. செலவீனத் துறையின் இணைச் செயலர் அளவிலான அதிகாரி ஒருவரின் தலைமையில், ஒன்பது அதிகாரிகள் இந்த குழுவில்
இடம்பெற்றுள்ளனர்.

தமிழை முதல்பாடமாகஅறிவிப்பதில் மாநில அரசு அதிக கெடுபிடிகளை மேற்கொள்ளவேண்டாம்-சென்னை ஐகோர்ட்

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழை முதல்பாடமாகஅறிவிப்பதில் மாநில அரசு அதிக
கெடுபிடிகளை மேற்கொள்ளவேண்டாம் என்று சென்னை ஐகோர்ட்அறிவுறுத்தியுள்ளது.
2006ம் ஆண்டு ஜூன் மாதம், தமிழக அரசு, தமிழ்கற்பிப்பு சட்டத்தின் கீழ் தீர்மானம்
இயற்றியது. அதனடிப்படையில்,மாநிலத்தில் உள்ள அனைத்து (ஸ்டேட் போர்டு மற்றும் மெட்ரிகுலேசன் ) பள்ளிகளிலும்தமிழ் கட்டாயம் முதல் மொழியாக இருக்க வேண்டும்என்று உத்தரவிட்டது.
நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளிகள் மற்றும் கேந்திரியா வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகள், இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி சஞ்சய் கிஷன் மற்றும் புஷ்பா சத்யநாராயணா பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
ஸ்டேட் போர்டு மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தமிழ் மொழியை முதல்பாடமாக அறிவிப்பதில் அரசு
கெடுபிடி மேற்கொள்ள வேண்டாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.மாணவர்களின் விருப்பதிற்கேற்ப முதல் மொழியை தேர்ந்தெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள்
அறிவுறுத்தியுள்ளனர்

செவ்வாய், 24 நவம்பர், 2015

மரபியலும் பரிணாம வளர்ச்சியும்

-மேகலா இராமமூர்த்தி


உயிரினங்களின் தோற்றமும் அவற்றின் பரிணாம வளர்ச்சியும் இயற்கையின் மிகப்பெரிய அதிசயங்களில் ஒன்றாக இன்றளவும் மதிக்கத்தக்கவை. உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய கருத்துக்களை மேனாட்டு அறிஞர்கள் ஆய்வு செய்து வெளியிடுவதற்கு வெகு காலத்திற்கு முன்பாகவே தமிழரின் தலையாய இலக்கண நூலான தொல்காப்பியம் அவற்றைத் துல்லியமாக விளக்கியிருப்பது நம்மை வியப்பிலாழ்த்துவதாகும்.

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே;
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே;
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே;
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே;
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே;
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே;-
நேரிதின் உணர்ந்தோர் 
நெறிப்படுத்தினரே. (தொல்: மரபியல்)

என்று நூற்பா வகுத்த தொல்காப்பியர்,

the-origin-of-speciesஓரறிவுயிர்கள் உடம்பினால் (மெய்) அறியும் தன்மையன; ஈரறிவுயிர்கள் உடம்பினாலும் வாயினாலும் அறியும் தன்மையன; மூவறிவுயிர்கள் உடம்பு, வாய், மூக்கு இவற்றால் அறிபவை ; நாலறிவுயிர்கள் உடம்பு, வாய் , மூக்கு மற்றும் கண்ணினால் அறிபவை; ஐயறிவுயிர்கள் உடம்பு, வாய், மூக்கு , கண், செவி எனும் ஐம்புலன்களால் அறிபவை; ஆறறிவுயிர்கள் ஐம்புலன்களாலன்றியும் மனத்தினாலும் அறியும் தன்மையன என்று உயிர்களின் அறிவு வளர்ச்சியைப் படிப்படியாய் விளக்கிச் செல்கின்றார்.

அத்தோடு நில்லாமல், புல்லும் மரமும் இவைபோன்ற பிற தாவரங்களும் ஓரறிவுயிர்கள். சங்கு, நத்தை, இப்பி, கிளிஞ்சல், ஏரல் முதலியவை ஈரறிவு படைத்தவை. கறையான், எறும்பு, அட்டை போன்றவை மூவறிவு உடையன. நண்டு, தும்பி, சுரும்பு, ஞிமிறு முதலியன நாலறிவு உடைய உயிர்கள். நாற்கால் விலங்குகளும், பறவைகளும், ஊர்வன மற்றும் நீர்வாழ் உயிரினங்களாகிய மீன், ஆமை முதலியவையும் ஐந்தறிவு படைத்த உயிர்கள். மக்கள் (மனிதர்கள்) ஆறறிவுயிர்கள்; மக்களேயன்றி தேவர், அசுரர், இயக்கர் போன்றோரும் இவ்வகையினரே என்று ஓரறிவுயிர்கள் தொடங்கி ஆறறிவுயிர்கள் ஈறாய் உள்ளவற்றைத் தக்க சான்றுகளோடும் அவர் விரித்துரைக்கும் திறம் அவர் அறிவின் ஆழத்தையும், நுட்பத்தையும் புலப்படுத்துகின்றது.

இவ்வாறு தமிழிலக்கணம் விளக்கிப் போந்த பரிணாம வளர்ச்சியை, ஆய்வு செய்து தக்க ஆதாரங்களோடு உலகிற்கு விளக்கியவர், 19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பிறந்த 'சார்லஸ் ராபர்ட் டார்வின்' (Charles Robert Darwin) எனும் இயற்கையியல் அறிஞராவார். மருத்துவராக வரவேண்டும் எனும் தன் தந்தையின் ஆவலை நிறைவேற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த டார்வின், பின்பு அதில் ஆர்வம் இல்லாமல் சமய குருமார்களுக்கான கல்வியைக் கற்கத் தொடங்கினார். அப்போது தாவரவியல் பேராசிரியராக அங்கே பணியாற்றி வந்த ஜான் ஹென்ஸ்லோ (John Henslow) என்பவரின் நட்பைப் பெற்றார்.

அவ்வேளையில் (1831-ஆம் ஆண்டு), 'பீகில்' (Beagle) எனும் அரசுக் கப்பல்Charles_Darwin தென் அமெரிக்காவுக்கும், பசிபிக் பெருங்கடலுக்கும் சென்று ஆராய்ச்சி செய்வதற்காக இங்கிலாந்திலிருந்து புறப்பட்டது. பேராசிரியர் ஹென்ஸ்லோவின் முயற்சியால் அக்கப்பலில் 'இயற்கை விஞ்ஞானியாக' நியமிக்கப்பட்டார் டார்வின்.

உலகின் பலநாடுகளுக்கும் அக்கப்பலில் பயணம் மேற்கொண்ட அவர், இப்பயணத்தில் பற்பல இயற்கை அதிசயங்களைக் கண்டார்; ஆதி குடிகள் பலரைச் சந்தித்தார்; ஏராளமான புதைபடிவங்களைக் (Fossils) கண்டுபிடித்துச் சேகரித்தார்; எண்ணிலடங்காத் தாவர இனங்களையும், விலங்கினங்களையும் ஆராய்ந்தார். தாம் கண்டறிந்த அனைத்தைப் பற்றியும் விரிவான குறிப்புகளை எழுதி வைத்துக் கொண்டார். இக்குறிப்புக்களே இவருடைய பிந்தைய நூல்களுக்கு ஆதாரங்களாக அமைந்திருந்தன.

டார்வின்  நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. அதன் பயனாய் மனிதனும் குரங்கும் ஒரே மூதாதை உயிரினத்திடமிருந்து பரிணாம வளர்ச்சியால் தோன்றிய இரு கிளைகள் என்ற கருத்தை அவர் வெளியிட்டார். அவர் அறிமுகப்படுத்திய இப்பரிணாமக் கொள்கையானது (Theory of Evolution), கடவுள் உலகைப் படைத்தார் எனும் மக்களின் மத நம்பிக்கைக்கு எதிரான புரட்சிகரமான அறிவியல் கொள்கையாய் அன்று அமைந்திருந்தது. ஆதலால், மதவாதிகள் உள்ளிட்ட அறிவியலாளர்கள் பலரும்கூட டார்வினின் பரிணாமக் கொள்கையை எள்ளி நகையாடினர்.

தன் ஆய்வுகளின் வாயிலாய்க் கண்டறிந்த உண்மைகளை 'உயிர்களின் தோற்றம்' (The origin of Species) எனும் நூலாக 1859-ஆம் ஆண்டு அவர் வெளியிட்டார். அந்நூல் இன்றளவும் புகழ்பெற்ற ஒன்றாக விளங்கிவருவதை நாமறிவோம்.

சூழ்நிலைக்கேற்ப உயிரினங்கள் தம்மைத் தகவமைத்துக் கொள்ளும் (Adaptation) போராட்டங்கள் நீண்ட நெடுங்காலமாக நிகழ்ந்து வருகின்றன என்று கூறிய டார்வின், இப்போராட்டத்தில் தாக்குப் பிடிக்கக்கூடிய வலிமை வாய்ந்த உயிரினங்களே நிலைத்து வாழ்கின்றன என்பதை விளக்கும் 'தக்கன பிழைக்கும்' ( survival of the fittest) என்ற கருதுகோளை முன்வைத்தார். இதில் இயற்கையின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இதுவே 'இயற்கைத் தேர்வு' (natural selection) என்று அழைக்கப்படுகின்றது.

டார்வினால் உருவாக்கப்பட்ட இந்தக் கோட்பாடுகள், இன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினால் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்துள்ளன. மனித மரபுக்கூறுகளை (genes) ஆராய்ந்து அவற்றின் தன்மைகளைக் கண்டறிந்து சொல்லும் அளவிற்கு இன்றைய அறிவியல் வளர்ச்சிகண்டுள்ளது.

உலக உயிர்களின் தோற்றத்தை, அவற்றின் படிநிலைகளை, வாழ்க்கைப் போராட்டங்களை அறிந்துகொள்ளப் பெரிதும் துணைபுரியும் டார்வினின் கொள்கைகளும், அவற்றை மையமாக வைத்து அவர் எழுதிய நூல்களும் உலகின் தலைசிறந்த உயிரியலறிஞர்களில் ஒருவர் என்ற புகழை அவருக்கு ஈட்டித் தந்துள்ளன.

மேகலா இராமமூர்த்தி

மேகலா இராமமூர்த்தி




 

வியாழன், 19 நவம்பர், 2015

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதிய பரிந்துரை இன்று மத்திய அரசிடம் அளித்தது :23.55 சதம் உயர்வு


மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை திருத்தி அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஏழாவது ஊதியக் குழு, 23.55 சதம் உயர்வு வழங்குவதற்கான பரிந்துரைகளை இன்று மத்திய அரசிடம் அளித்தது. 

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வதியர்களின் ஓய்வூதியத்தை மாற்றியமைக்க, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 7-வது ஊதிய பரிந்துரைக் குழுவை, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமித்தது.

இந்தக் குழு, தனது பரிந்துரைகளை இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் சமர்பித்தது.

பரிந்துரைகள் விவரம்

  • அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் படிகள் 23.55 சதமாக உயர்த்தப்படும்

  • இந்த ஊதிய உயர்வுகள் ஜனவரி 2016 முதல் அமல்படுத்தப்படும்

  • குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 18,000 ஆக இருக்கும், அதிகபட்ச ஊதியமாக ரூ. 2.25 லட்சமாக இருக்கும்

  • ஆண்டுதோறும் 3 சத ஊதிய உயர்வு வழங்கப்படும்

  • ஓய்வூதியர்களுக்கு 24 சத உயர்வு வழங்கப்படும்

  • பாதுகாப்புத் துறையை தொடர்ந்து அனைத்து மத்திய அரசு பணியாளர்களுக்கும் ஒரே பதவி ஒரே ஓய்வூதிய முறை அமல்படுத்தப்படும்.

  • பணிக்கொடைக்கான உச்சவரம்பு ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்படும். மேலும், பஞ்சபடி 50 சதத்துக்கும் அதிகமாக உயர்த்தப்படும்போது, இந்த உச்சவரம்பு மேலும், 25 சதம் உயர்த்தப்படும்.

  • தற்போது மாதத்திற்கு ரூ. 90 ஆயிரம் ஊதியம் பெறும் அமைச்சரவை செயலர் இனி ரூ. 2.25 லட்சம் பெறுவார்.

  • இந்த பரிந்துரைகளால் மத்திய அரசுக்கு ரூ. 73,650 கோடியும், ரயில்வேக்கு ரூ. 28,450 கோடியும் கூடுதல் செலவாகும்.

  • நடப்பில் உள்ள 52 படிகள் வழங்கும் முறை 36 ஆக குறைக்கப்படும்

  • இந்த பரிந்துரை மூலம் 47 லட்சம் ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவர்.

 

புதன், 18 நவம்பர், 2015

NET JRF -paper I Preparation Tips

Preparation Tips:

For many of students who haven't experience in appearing for competitive exams , first paper is an uphill task. What they forget is that even those who have turned the first paper as a area of edge in competitive exams, have cultivated such a skill with a definite strategy spending much time. If it's so, why can't you also score more than 80 with a little bit of smart study? Definitely you can. But what needs is a strategy.

Here I am jotting down tips I have got through talking to different JRF holders from most important central universities in India.

Examples of Old Questions asked in first paper in Reasoning.

  • In certain code TEACHER is written as VGCEJGT. The code of CHILDREN will be

(A) EKNJFTGP

(B) EJKNFTGP

(C) KNJFGTP

(D) None of these

Answer: (B)

  • A person has to buy both apples and mangoes. The cost of one apple is Rs 7/- whereas that of mango is Rs 5/-

If the person has Rs. 38, the number of apples he can buy is

(A) 1

(B) 2

(C) 3

(D) 4

Answer: (D)

  • A man pointing to a lady said, "The son of her only brother is the brother of my wife," The lady is related to the man as

(A) Mother's sister

(B) Grand mother

(C) Mother-in-law

(D) Sister of Father-in-law

Answer: (D)

  • In this series 6, 4, 1,2,2,8, 7,4,2,1,5,3,8,6,2,2,7,1,4,1,3,5,8,6.

How many pairs of successive numbers have a difference of 2 each?

(A) 4

(B) 5

(C) 6

(D) 8

Answer: (C)

  • The mean marks obtained by a class of 40 students is 65; The mean marks of half of the students is found to be 45. The mean marks of the remaining students is

(A) 85

(B) 60

(C) 70

(D) 65

Answer: (A)

Preparation Tips:

Those who haven't read our two articles on General Studies,  please read it first and come back to start here.

Reasoning is one of the areas where you can score 80% of marks i.e. 4 out of 5 without much risk. But unfortunately, 'Fear Monster' is created in the mindset of students that everyone starts saying "Maths he yaar, Mujse nahi hoga". Mathematics questions asked in UGC is pretty simple and most importantly, questions asked in this area is completely from specific portions which we will delineate here one by one. No matter what background you have in mathematics, you can answer these questions with smiling face. Don't fear dears as these questions are pretty easier compared to all General Studies question papers ranging from IB to UPSC. So, gird up your loins…

Mainly, questions are asked from 7 areas in Reasoning. Mathematical Reasoning is only one of them.  We will start with one by one.

First: Mathematical Reasoing Test.

Look at an example:

19+1           =18

          33+3           =30

          14+2           =?

What is the answer?

It's pretty simple. Answer is 12. + Sign is used instead of – sign. Is this mathematics?. Not at all. It's only a simple reasoning where digits are used. Don't confuse it with Mathematics. When you think it's Mathematics, the 'Fear Monster' crops up and keep it at bay which finally causes you flunk in the exam.

So, to tackle this challenge, what you have to do is to practise much. If you practise at least 25 questions from this area, definitely, you will be able to score more than 8 marks out of 10.

In this area, you need to have familiarity with the questions. Nothing else matters. It's quite likely that  you may find a question a little bit difficult. Leave it, don't bother about it and please don't cultivate a habit saying that until I solve this question I won't solve others "is sawal ko anser karkee hee rahoonga". This attitude is a pitfall for you. Come over it and go to other sections.

Biggest benefit of this exam is that you can skip 10 questions without any thought. You have to answer only 50 out of 60.

Second: Insert the Missing Number:

In this section, questions are asked mainly with only one specific angle. Among five columns, numbers will be given in all 4. You will be demanded to fill up the rest. What is needed is familiarity with this type of question. Simple addition and subtraction are used in this. Get acquainted with this type of questions and definitely, you will be able to answer the questions from this area. I will tell you the reference for practice and revision in the end.

Third: Number Series Test.

Questions asked from this area.

  1. If the series 4,5,8,13,14,17,22,…….. is continued in the same pattern, which one of the following is not a term of this series?

(A) 31

(B) 32

(C) 33

(D) 35

Answer: (C)

Importance of this area is that there isn't any paper without a question from this area. So, master this area. You are going to get 2 marks for sure. More interestingly, mastering this area doesn't need much expertise.

Adding, subtracting, multiplying and dividing equal numbers may solve some questions. But some questions go beyond this. Say like you have to add 2 then subtract then add and it goes so on. Sometimes, it's a question of squares of number and their square roots, cube of numbers and their cube root and so on. So, if you practise some questions from this area, this area won't pose you much danger.

Fourth: Letter Series Test.

Example of the question asked from this area.

  1. Complete the series BB, FE, II, ML, PP….. by choosing one of the following option given:

(A) TS

(B) ST

(C) RS

(D) SR

Answer: (A)

In this format of questions, you have to remember the number of letters in English alphabet. Then it's much easier to tackle it.

I have two shortcuts with me. One is EJOTY for 5,10,15,20 and 25 and CFILORUX for 3,6,9,12,15,18,21 and 24. If you get time, write down these two shortcuts in the question papers as soon as you get the paper. The task will be easier for you then.

Practise a few sets of questions for this also. Then these questions are cakewalk for you.

Fourth: Blood Relation Test.

Example of questions asked in this area.

  • A man pointing to a lady said, "The son of her only brother is the brother of my wife," The lady is related to the man as

(A) Mother's sister

(B) Grand mother

(C) Mother-in-law

(D) Sister of Father-in-law

Answer: (D)

Blood Relation is common sense reasoning question. Practise a few sets of questions and you will master it. Moreover, questions asked in this area are not that much difficult most of the time though exceptions happen. So prepare accordingly. I will suggest you the book in the end of article.

Fifth: Logical Reasoning.

Examples of questions asked in the previous exams from this area.(June Dec).

  • Given below are two premises and four conclusions drawn from those premises. Select the code that expresses conclusion drawn validly from the premises (separately or jointly).

Premises:

(a) All dogs are mammals.

(b) No cats are dogs.

Conclusions:

(i) No cats are mammals

(ii) Some cats are mammals.

(iii) No Dogs are cats

(iv) No dogs are non-mammals.

Codes:

(A) (i) only

(B) (i) and (ii)

(C) (iii) and (iv)

(D) (ii) and (iii)

Answer: (C)

  • Given below is a diagram of three circles A, B & C inter-related with each of Indians. The circle B represents the class of scientists and circle C represents the class of politicians. p,q,r,s… represent different regions. Select the code containing the region that indicates the class of Indian scientists who are not politicians.

(A) q and s only

(B) s only

(C) s and r only

(D) p, q and s only

Answer: (B)

 

This area covers five subthemes. They are Structure of arguments, Deductive and Inductive Reasoning, Analogy, Logical Diagram, Venn Diagram and Analytical Reasoning.

In the structure of the argument, they ask whether the arguments given below are weak or strong. To understand this question and tackle this challenge, you have to refer the book I suggest in the end of the book.( Though we will come up with all the material needed to prepare for First Paper here in this forum and make your preparation easier without any guide. We have to wait as it needs much time).

Deductive and Inductive Reasoning, where syllogism also comes, is one of the areas questions are asked profusely. So, you have to prepare for that from the book I suggest you in the end.

In the Analogy Test, questions are asked to identify relationships most of the time. Work and Tool Relationship, Worker and Tool Relationship, Tool and Action Relationship, Tool and Object Relationship, Action and Object Relationship, Worker and working place relationship, worker and product relationship, product and raw material relationship, instrument and measurement relationship, quantity and Unit Relationship, Animal and Young One Relationship, Individual and Dwelling Relationship, Male and Female Relationship, Work and Intensity Relationship, Word and Synonym Relationship, Work and Antonym Relationship and so on. There are other relationships also. Once you cover some questions from this area, it will be much easier for you to do it also

Sixth: Coding and Decoding:

Coding and Decoding is one of the most important areas asked in this exam. Use of coding (Converting a message using an information language to achieve secrecy) is a popular strategy used in modern societies. Some of questions asked in this area are through forward and backward jumbling, Reversing the whole spelling of the sentence, Interchanging and pairing of words, Order and Disorder of letters like changing 8th letter into 19th letter.

Seventh: Classification Test:

In this test, odd man, word and things have to be classified in this test. If we practise a little bit, this area is not that much challenging. We can scale through this exam, especially these areas with smiles on our face.