புதன், 4 நவம்பர், 2015

ஐ.ஐ.டி. வழிகாட்டி- 1:


நீங்கள் ப்ளஸ் 2 மாணவரா? அல்லது அதற்கு முன்பாகவே மேல்படிப்பு குறித்து திட்டமிட்டு செயல்பட்டு வருபவரா? உங்களிடம் ஒரு கேள்வி.

எந்தக் கல்லூரியில் சேர முன் னுரிமை கொடுப்பதாக இருக்கி றீர்கள்? இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் டெக்னாலஜி (சுருக்கமாக ஐ.ஐ.டி.) - இது ஓ.கேவா? கேள்வியைக் கேட்டதுமே 'நடக்கிற காரியமா?' என்று தோன்று கிறதா?

உங்கள் பிரமிப்பு நியாயமானது தான். ஐ.ஐ.டி. பலவிதங்களில் ஸ்பெஷலானதுதான். அது பிறந்ததே ராஜமரியாதையோடுதான்.

'ஏதோ ஐ.ஐ.டி. என்ற ஒன்றைத் தொடங்கினார்கள். அதில் சிலர் சேர்ந்தார்கள். படித்தார்கள். சிறப் பாக இருந்தது. ஐ.ஐ.டி.யின் புகழ் பரவியது' என்பதுபோல் வளர்ந் தது அல்ல ஐ.ஐ.டி.யின் கவுரவம்.

வெகு சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துக் காகவே அது உருவானது. செதுக்கப்பட்டது. அரசால் அதற்குப் பலவித போஷாக்குகள் அளிக்கப்பட்டன. நிதி உதவி என்ற போஷாக்கு. 'நாங்கள் தலை யிட மாட்டோம்' என்ற உத்தர வாதம். வேறென்ன வேண்டும்? தொடக்கத்தில் வேறு சில நாடுகளின் ஸ்பெஷல் கவனிப்பு கூட ஐ.ஐ.டி.க்களுக்கு இருந்தது (சென்னை ஐ.ஐ.டி.க்கு - ஜெர்மனி).

இன்று உலக அளவில் புகழ் பெற்றிருக்கும் இந்தியக் கல்வி நிறுவனங்களில், மிக முக்கிய மானதாக விளங்கும் ஐ.ஐ.டி.யின் தொடக்கம் சுவாரஸ்ய மானது. அது ஆங்கிலேயர் ஆண்ட காலம். 1946-ல் வைஸ்ராயால் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் நோக்கம் இதுதான். ''உலகப்போர் முடிவுக்கு வந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் மிக உயர்ந்த தொழில்நுட்பக் கல்வியை அளிக்கும் வகையில் சில கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் உரு வாக்கப்பட வேண்டும்''. குழுவில் 22 உறுப்பினர்கள். தலைமை ஏற்றது நளினிரஞ்சன் சர்கார் என்பவர்.

குழு கூடிக் கூடி பேசியது. ஐ.ஐ.டி. பிறந்தது.

முதல் ஐ.ஐ.டி. இயங்கத் தொடங்கியது மேற்கு வங்காளத் தில் உள்ள கரக்பூரில். மே, 1950-ல் இது உருவானது. என்றாலும் அதற்கு 6 வருடங்களுக்குப் பிறகுதான் இந்திய அரசு ஐ.ஐ.டி. சட்டத்தை நாடாளு மன்றத்தில் அறிமுகப்படுத்தியது.

"இது தேசிய அளவில் முக்கியத் துவம் வாய்ந்த கல்வி நிறுவனம்'' என்றது சட்டம். அதை உறுதிப் படுத்தும் வகையில் 1956-ல் ஐ.ஐ.டி.யில் ஏற்பாடு செய்யப் பட்டி ருந்த முதல் பட்டமளிப்பு விழா வில் கலந்துகொண்டவர் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு.

இந்தியாவின் முதல் ஐ.ஐ.டி.யின் முதல் பட்டமளிப்பு விழாவில், முதல் பிரதமர்!

"இந்தியாவின் வருங்காலம் இங்கு உருவாக்கப்படுகிறது'' என்றார் நேரு.

பிறகு அடுத்தடுத்து மும்பை, சென்னை, கான்பூர், டெல்லி ஆகிய நான்கு இடங்களில் ஐ.ஐ.டி.-க்கள் திறக்கப்பட்டன.

ஐ.ஐ.டி.க்கள் ஆரம்பத்தி லேயே சிக்ஸர் அடித்தன. ''எங்கள் மாநிலத்துக்கு ஐ.ஐ.டி. வேண்டும்'' என்று அஸ்ஸாம் மாநில மாணவர்கள் போர்க் கொடி பிடித்தார்கள். அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அதை ஏற்றுக் கொண்டார். குவாஹாட்டியில் மேலும் ஒரு ஐ.ஐ.டி. தொடங்கப் பட்டது. 2001-ல் இந்தியாவின் மிகப் பழைய பொறியியல் கல்லூரியான ரூர்கி பல்கலைக்கழகத்துக்கு ஐ.ஐ.டி.க் கான அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

2003-ல் மேலும் சில ஐ.ஐ.டி.க் களை தொடங்க ஒப்புக் கொண்டார் பிரதமர் வாஜ்பாய். 16 மாநிலங்கள் தங்கள் எல்லைக்குள் ஐ.ஐ.டி. தொடங்கப்பட வேண்டும் என்று விண்ணப்பித்தன. இவற்றில் ஏழு கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்தது இதற்கான குழு. ஐ.ஐ.டி.க்கள் அளிக்கும் முக்கிய பட்டப் படிப்பு (அண்டர் கிராஜுவேஷன்) நான்கு வருட பி.டெக். (B.Tech.) எட்டு செமஸ்டர் கொண்டது இது.

சரி இப்போது சொல்லுங்கள். ஐ.ஐ.டி.யில் சேர்ந்து பட்டப் படிப்பைத் தொடங்க ஓ.கேவா?

 உங்களில் கணிசமானவர்களுக்கு இன்னமும் தயக்கம் தொடர வாய்ப்பு உண்டு. என்ன, அதன் நுழைவுத் தேர்வு குறித்த பயம்தானே?

''நீங்கள் என்ன சொன்னாலும் நான் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக் குத் தயாராவதாக இல்லை'' என்கிறீர்களா? அதுவும் நுழைவுத் தேர்வுக்குத் தகுதிகள் இருந்தும். இந்த குறுந்தொடரைப் படியுங் கள். மாற வாய்ப்பு உண்டு. உங்கள் வருங்கால நந்தவனத்தில் வாசப் பூக்கள் மலர்ந்து நிறைந்திருக்க ஓர் அருமையான வாய்ப்பு இது. ஒரு மிக நல்ல வாய்ப்யை அலட்சிய மாகத் தவறவிடும் ஒருவரை ஒரே வார்த்தையில் எப்படி விவரிப் பீர்கள்? அந்த வார்த்தையை உங்க ளைப் பார்த்து யாரும் சொல்லி விடக் கூடாது. படியுங்கள். நாளை யிலிருந்து தொடங்குகின்றன ஸ்வீட் தகவல்கள்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக