புதன், 4 நவம்பர், 2015

'என்னிடம் ஆசையில்லை; அதனால் எனக்கு அச்சமில்லை,'' என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன்

'முன்மாதிரி வழக்கறிஞர்' என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன்
பேசியதாவது:சுதந்திர போராட்ட காலத்தில் வழக்கறிஞர்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். பிரபல வழக்கறிஞராக திகழ்ந்த செல்வந்தர் வ.உ.சிதம்பரம் உட்பட எண்ணற்றோர், சுதந்திர போராட்டத்திற்காகதமது சொத்து முழுவதும் இழந்தனர். மற்றொரு வழக்கறிஞர்கள் தொழிலில் கொடி கட்டி பறந்தனர். கோடிகோடியாய் சம்பாதித்தனர்.சுதந்திரத்திற்கு பின் தாங்கள் சம்பாதித்த பணம் முழுவதையும் கல்விக்காக அர்ப்பணித்தனர். இவர்களிடம் இருந்தஏதோ ஒரு குணநலன்கள், அவர்களை முன்மாதிரியான வழக்கறிஞர்களாக அறிந்து கொள்ள முடிகிறது.வழக்கறிஞர்களுக்கு ஏழு அடிப்படை குணங்கள் அவசியம். அவை கடின உழைப்பு, திறமையை வெளிப்படுத்துதல், வெற்றி மற்றும் தோல்வியை சமமாக பார்க்கும் மாறுபட்ட பார்வை, அச்சமின்மை, தர்மம்,தான் நியாயமாக இருக்க வேண்டும் மற்றும் அடிப்படை சமூக கடமைகள் ஆகிய குணங்கள் வழக்கறிஞர்களுக்கு அவசியம். அச்சமின்மை வேறு; அச்சுறுத்தல் வேறு. ஆசை இல்லாதவன், அச்சமில்லாமல் இருக்க முடியும். எனக்குஆசை இல்லை. அதனால் என்னிடம் அச்சமில்லை என்றார்.
ஏ.பி.வி.எஸ்., மாநில பொதுச் செயலாளர் பழனிக்குமார், தலைவர் ரமேஷ்குமார், நிர்வாகிகள் நந்தகுமார்,
பாலாசுந்தரம், சீனிவாசன், அழகுராம்ஜோதி, பாலகிருஷ்ணன், வளர் முருகன், அய்யப்பன், மத்திய அரசு வழக்கறிஞர் பால்பாண்டி, வழக்கறிஞர்கள் பூர்ணாச்சாரி, அருண்குமார்,
கதிர்வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக