திங்கள், 11 ஜனவரி, 2016

கல்வித் தரம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் -ஜனாதிபதி

நாட்டில் கல்வித் தரம் குறைந்து வருவதைத் தடுத்து, அதனை மேம்படுத்த நடவடிக்கைஎடுக்க வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ராஞ்சியிலுள்ள பிர்லா தொழில்நுட்பக் கல்வி நிலையத்தின் 26வது
பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, 12 தங்க மெடல் வென்ற மாணவர்கள் உட்பட, 761 இளநிலை
மாணவர்கள், 604 முதுநிலை மாணவர்களுக்குபட்டங்களை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது : நாட்டில் கல்விதரம் குறைந்து வருகிறது. கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும் இதனைத்தடுத்து, கல்வித் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை தரமான ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். நாட்டிலுள்ள உயர் கல்வி நிறுவனங்கள் தங்களுக்குள் அதிகளவில் தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டும். வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்வது அவசியம். உயர் கல்வி நிறுவனங்கள் மாணவர்களைத் தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும். நம் நாட்டு இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், பலருக்கு வேலை வழங்குபவர்களாக இருப்பதே நாட்டுக்குப் பெருமை.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக