திங்கள், 29 பிப்ரவரி, 2016

2016-17 பட்ஜெட்டில் மாற்றத்துக்கான அலுவல் அடிப்படையில் 9 தூண்கள்


நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த 2016-17 பட்ஜெட்டில் மாற்றத்துக்கான அலுவல் அடிப்படையில் 9 தூண்கள் இடம்பெற்றிருந்தன.

9 தூண்கள்:

1. ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதை முக்கிய கவனமாக கொண்ட வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்.

2. வேலை வாய்ப்பை முக்கிய கவனத்தில் கொண்ட ஊரகத்துறை.

3. சமூக நலத் துறை.

4. இந்தியாவை உற்பத்தி சமுதாயமாக மாற்றுவதற்கான கல்வித் திறன்கள் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்குதல்.

5. திறமையான செயல்பாட்டிற்கும் தரமான வாழ்க்கைக்கும் அடிப்படை வசதி மற்றும் முதலீடுகள்.

6. நிதித் துறை சீர்திருத்தங்கள்.

7. ஆட்சி முறை மற்றும் வர்த்தகம் புரிதலை எளிதாக்குதல்.

8. நிதிக் கட்டுப்பாடு.

9. வரிச் சீர்திருத்தங்கள்.


 


ஆதார் அட்டைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய அரசு முடிவு



 அரசு வழங்கும் மானியத் தொகைகள் தேவைப்படுவோருக்கு நேரடியாகச் சென்றடையுமாறு ஆதார் அட்டைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


இது குறித்து இன்று பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் அருண் ஜேட்லி, "ஆதார் திட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி அரசு மக்களுக்கு வழங்கும் மானியங்கள் நேரடியாக சென்றடையுமாறு சட்டம் ஒன்றை நிறைவேற்றுவதன் மூலம் மேற்கொள்ளப்படும்.

இதுவரை 98 கோடி ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 26 லட்சம் பயோ-மெட்ரிக் மற்றும் 1.5 லட்சம் இ- கேஒய்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

2010-ம் ஆண்டு தேசிய அடையாள ஆணைய மசோதா மாநிலங்களவையில் இன்னமும் நிலுவையில் உள்ளது. 

எனவே நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் ஆதாரைப் பயன்படுத்த அதற்கு சட்ட அடித்தளம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

அதாவது, அரசு வழங்கும் அனைத்துப் பயன்கள், மானியங்கள், சேவைகள் அனைத்தும் ஆதார் திட்டத்தின் மூலமே நிறைவேற்றப்பட சட்டம் மேற்கொள்ளப்படும்" என்றார் அருண் ஜேட்லி.


மத்திய பட்ஜெட்டில் இம்முறை வேளாண் துறை மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இயற்கை வேளாண் முறை முதல் ஆன்லைன் சந்தைகள் வரை முக்கிய அறிவிப்புகள் வெளியிட்ப்பட்டுள்ளன.


மத்திய பட்ஜெட்டில் இம்முறை வேளாண் துறை மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இயற்கை வேளாண் முறை முதல் ஆன்லைன் சந்தைகள் வரை முக்கிய அறிவிப்புகள் வெளியிட்ப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 மே 26-ம் தேதி பதவியேற்றது. மத்திய அரசில் நிதியமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஜேட்லி 3-வது முறையாக தனது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அதில் வேளாண் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகள் விவரம்:

* வேளாண் துறைக்கு ரூ.35,984 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பிரதான் மந்திரி கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்யப்படும். (இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க புதிய திட்டம்). 

*டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் பிறந்த நாளன்று ஒருமைப்படுத்தப்பட்ட வேளாண் மின்னணு மேடை சந்தைப்படுத்துதல் அமைப்பு துவக்கி வைக்கப்படும்.

* வேளாண் சந்தைகள் இணையதளம் மூலம் இணைக்கப்படும்.

* வேளாண் பொருட்களுக்கான ஆன்லைன் சந்தை அம்பேத்கர் பிறந்தநாளில் தொடங்கப்படும்.

* பிரதமரின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.5,500 கோடி ஒதுக்கீடு.

* 89 நீர்ப்பாசன திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்படும்.

* மழை வளம் நிறைந்த பகுதிகளில் இயற்கை வேளாண் முறையில் மகசூலை பெருக்க இரண்டு திட்டங்கள் அறிமுகம்.

* இயற்கை வேளாண் முறையை ஊக்குவிக்க ரூ.412 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நீர்பாசன திட்டங்களுக்காக நபார்டு வங்கியில் பிரத்யேகமாக ரூ.20,000 கோடி முதலீட்டில் நீப்பாசன நிதியம் உருவாக்கப்படும்.

* பிரதான் மந்திரி கிருஷி சிச்சாய் யோஜனாவின் கீழ் 28.5 லட்சம் ஹெக்டேர் விளைநிலத்துக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படுத்தப்படும்.

* கால்நடை நலன் பேண 4 பிரத்யேக திட்டங்கள் அமல்.

* விவசாயிகள் வருமானத்தை அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

* 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.38,500 கோடி நிதி ஒதுக்கீடு. கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக இவ்வளவு பெரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இது முதன்முறையாகும்.

 

சிறிய அளவில் வரி செலுத்துவோருக்கு மத்திய பட்ஜெட்டில் 2 புதிய வரிச்சலுகைகளை நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். 1. பிரிவு 87-ஏ-யின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கும் குறைந்த வருமானம் உள்ளோருக்கு ரூ.3,000 வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2 கோடிக்கும் அதிகமானோர் பயன்பெறுவார்கள் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார். வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. 2015-16 பொருளாதார ஆய்வறிக்கை இது குறித்து மேற்கொண்ட பரிந்துரையை கடைபிடித்துள்ளது மத்திய பட்ஜெட். 2. அதேபோல் சொந்த வீடு இல்லாதவர்கள் மற்றும் வீட்டு வாடகை அலவன்ஸ் தொகை பெறாதவர்களுக்கும் அருண் ஜேட்லி சலுகை அறிவித்துள்ளார். இவர்கள் இதுவரை ஆண்டுக்கு ரூ.24,000 வரை வரிச்சலுகை பெற்று வந்தனர். இது தற்போது ரூ.60,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 60 சதுர மீட்டர்களுக்கு குறைவாக கட்டப்படும் வீடுகளுக்கு சேவை வரி இல்லை. முதல் முறையாக வீடு வாங்குவோரின் ரூ.35 லட்சம் வரையிலான வீட்டுக் கடன் மீதான வட்டியில் ரூ.50,000 கூடுதல் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால் மட்டுமே இந்த வட்டிச்சலுகை பொருந்தும். இது வாடகை வீட்டில் வசிப்போருக்கு பயனளிக்கும் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார். மேலும் வரி வசூலிப்பை எளிமையாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார். வரிகள் குறித்த முக்கிய அறிவிப்புகள்: ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள வரி செலுத்துவோருக்கு ஆண்டுக்கு ரூ.3,000 நிவாரண விலக்கு : இதனால் ஒரு கோடி வரி செலுத்துவோர் பயன் பெறுவார்கள். ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள வரி செலுத்துவோருக்கு வரி தள்ளுபடி ரூ.2,000 லிருந்து ரூ.5,000 மாக உயர்த்தப்படுகிறது. வாடகை வீடுகளில் வசிப்போருக்கு வாடகை இனத்தை பொருத்தவரை வருமானத்தில் இருந்து குறைப்பு செய்யும் தொகை ரூ.20,000 லிருந்து ரூ.60,000 மாக உயர்த்தப்படுகிறது. 60 சதுர மீ பரப்புக்கும் குறைவான பரப்புள்ள வீடுகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளித்தல். ஆட்டிசம், பெருமூளை வாதம் போன்ற நோய்கள் தொடர்பான ஆரோக்கிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரும் பொது காப்பீட்டுத் திட்டங்களுக்கு சேவை வரி விலக்கு அளித்தல். இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தி திறன்களுக்கு சுங்க மற்றும் கலால் வரிச் சலுகைகள் வழங்குதல்.


சிறிய அளவில் வரி செலுத்துவோருக்கு மத்திய பட்ஜெட்டில் 2 புதிய வரிச்சலுகைகளை நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

1. பிரிவு 87-ஏ-யின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கும் குறைந்த வருமானம் உள்ளோருக்கு ரூ.3,000 வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2 கோடிக்கும் அதிகமானோர் பயன்பெறுவார்கள் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.


வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. 2015-16 பொருளாதார ஆய்வறிக்கை இது குறித்து மேற்கொண்ட பரிந்துரையை கடைபிடித்துள்ளது மத்திய பட்ஜெட்.

2. அதேபோல் சொந்த வீடு இல்லாதவர்கள் மற்றும் வீட்டு வாடகை அலவன்ஸ் தொகை பெறாதவர்களுக்கும் அருண் ஜேட்லி சலுகை அறிவித்துள்ளார். இவர்கள் இதுவரை ஆண்டுக்கு ரூ.24,000 வரை வரிச்சலுகை பெற்று வந்தனர். இது தற்போது ரூ.60,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

60 சதுர மீட்டர்களுக்கு குறைவாக கட்டப்படும் வீடுகளுக்கு சேவை வரி இல்லை.

முதல் முறையாக வீடு வாங்குவோரின் ரூ.35 லட்சம் வரையிலான வீட்டுக் கடன் மீதான வட்டியில் ரூ.50,000 கூடுதல் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால் மட்டுமே இந்த வட்டிச்சலுகை பொருந்தும்.

இது வாடகை வீட்டில் வசிப்போருக்கு பயனளிக்கும் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார். மேலும் வரி வசூலிப்பை எளிமையாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.

வரிகள் குறித்த முக்கிய அறிவிப்புகள்:

ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள வரி செலுத்துவோருக்கு ஆண்டுக்கு ரூ.3,000 நிவாரண விலக்கு : இதனால் ஒரு கோடி வரி செலுத்துவோர் பயன் பெறுவார்கள்.

ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள வரி செலுத்துவோருக்கு வரி தள்ளுபடி ரூ.2,000 லிருந்து ரூ.5,000 மாக உயர்த்தப்படுகிறது.

வாடகை வீடுகளில் வசிப்போருக்கு வாடகை இனத்தை பொருத்தவரை வருமானத்தில் இருந்து குறைப்பு செய்யும் தொகை ரூ.20,000 லிருந்து ரூ.60,000 மாக உயர்த்தப்படுகிறது.

60 சதுர மீ பரப்புக்கும் குறைவான பரப்புள்ள வீடுகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளித்தல்.

ஆட்டிசம், பெருமூளை வாதம் போன்ற நோய்கள் தொடர்பான ஆரோக்கிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரும் பொது காப்பீட்டுத் திட்டங்களுக்கு சேவை வரி விலக்கு அளித்தல்.

இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தி திறன்களுக்கு சுங்க மற்றும் கலால் வரிச் சலுகைகள் வழங்குதல்.


 

TRB SCERT LECTURERS :விளம்பர அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளத

TRB SCERT LECTURERS :விளம்பர அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

பதிவிறக்கம் செய்ய செய்ய
http://www.trb.tn.nic.in/DTERT2016/29022016/Notification.pdf

சனி, 27 பிப்ரவரி, 2016

TRB DIET 2016: ADVT NO 2/2016 -DETAILS OF POSTS

DIET LECTURER EXAM ANOUNCEMENT BY TRB:ஆகஸ்டு 2016 ல் போட்டித் தேர்வு நடைபெறுகிறது.ஏப்ரல் மாதம், தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகிறது

Exam Date (Tentative) - First Fortnight of August 2016
Vacancy Details
Senior Lecturer - 35
Lecturer -119
Junior Lecturer - 68
Salary Details Senior Lecturer - Re.15600 -39100 +GP 5700
Lecturer - Rs. 9300 - 34800 + GP4800
Junior Lecturer - Rs. 9300 -34800 +GP 4600
Qualification Senior Lecturer - Master Degree + M.Ed + 5 Years Experience
Lecturer - Master Degree + M.Ed
Junior Lecturer - Master Degree + M.Ed
Note : A seperate detailed notification and prospectus will be published in the month of April 2016. Upon which the application form sale will be commenced.

TRB advt in DAILY THANTHI

ஆய்வக உதவியாளர்:தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால்எட்டு லட்சம் பேர் கவலை

ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு நடந்து முடிந்து, எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால், தேர்வெழுதிய,எட்டு லட்சம் பேர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள, 4,362 ஆய்வக உதவியாளர் பணிக்கு,
கடந்த ஆண்டு மே, 31ல் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது; இதில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.

தேர்வில் வெற்றி பெறுவோரில், ஒரு காலியிடத்திற்கு, ஐந்து பேர் என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வு நடத்தி, அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் செய்ய அரசு திட்டமிட்டது. நேர்முகத் தேர்வில்,வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எனப்படும், 'சீனியாரிட்டி'க்கு - 10; உயர் கல்வித் தகுதிக்கு - 5; பணிஅனுபவத்துக்கு - 2; நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு - 8 என, மொத்தம், 25 மதிப்பெண்வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவருக்கே பணி ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணை கணக்கிடாமல், நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்தால்,அதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக, தேர்வர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத் தேர்வையும் கணக்கிட்டு, தேர்வு முடிவை அறிவிக்க உத்தரவிட்டது.
எனினும், தேர்வு நடந்து முடிந்து, எட்டு மாதங்கள் ஆகியும், முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இது, தேர்வர்கள் மத்தியில் அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்திஉள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பதவி உயர்வு மூலம் 1000க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பதவி உயர்வு மூலம் 1000க்கும் மேற்பட்ட முதுநிலை
ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அரசு உயர்,மேல்நிலைப்பள்ளிகளுக்கான
காலியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்விலும், 50 சதவீதம் நேரடி தேர்வு மூலமும் ஆசிரியர்கள்
நியமிக்கப்படுகின்றனர். இதன்படி, தமிழகத்தில் 2016--17ல் 1000க்கும் மேற்பட்ட பட்டதாரி
ஆசிரியர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கி, காலியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக 2002 முதல் 2008க்குள் பணிக்கு சேர்ந்த அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர்களின் தகுதி விபரம்சேகரிக்கப்படுகிறது. ஒரே பாடத்தில் இளநிலை, முதுநிலைபட்டம் பெற்றவர்களுக்கு 1:1, வேறு பாடத்தில்(கிராஸ் மேஜர்) பட்டமேற்படிப்பு முடித்தவர்களுக்கு 1:3 என்ற அடிப்ப டையில் பதவி உயர்வு வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்ட மிட்டுள்ளது. தமிழ் பாடத்திற்கு 2002--03 லும், ஆங்கி லத்திற்கு 2005--06 லும், அறிவியல் பாடங்களுக்கு 2007--08லும், கணிதத்திற்கு 2005--06லும், வரலாறுக்கு 2003--04 வரையிலும் உத்தேச பட்டியல் தயாரிக்கின்றனர். இதன் மூலம் அடுத்தக் கல்வியாண்டு துவக்கத்தில் 50 சதவீத முதுநிலை ஆசிரியர்காலியிடங்கள் நிரப்பப்படும் என, கல்வித்துறை தெரிவிக்கின்றது.
அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த இரு ஆண்டாக டி.ஆர். பி.,நேரடி தேர்வு நடக்கவில்லை.மொத்த
காலியிடங்களில் பதவி உயர்வில் செல்வோரின் எண்ணிக்கை குறையும். அரசு உத்தரவில் 1,063 பேருக்குவாய்ப்பு என குறிப்பிட்டு இருந்தாலும், பட்டியலில் இடம் பெற்ற எல்லோருக்கும் பதவி உயர்வு கிடைப்பது அரிது," என்றார்.

சான்றிதழ் உண்மையானதா என, கண்டுபிடிக்க முடியாமல் பள்ளிக்கல்வி துறை திணறுகிறது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 10ஆண்டுகளாக சம்பளம் அளித்தபிறகும், அவர்களின் சான்றிதழ்
உண்மையானதா என, கண்டுபிடிக்க முடியாமல் பள்ளிக்கல்வி துறை திணறுகிறது. இதனால், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுநிராகரிக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில், 2006க்கு பின், 10 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, 10 ஆண்டுகளாக
ஊதியம் வழங்கிய பிறகும், அவர்களின்சான்றிதழ் உண்மையானதா என, பள்ளிக் கல்வி துறை
மற்றும் தேர்வுத்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டில்,உயர்நிலை தலைமை ஆசிரியர் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க, பட்டியலை தயாரிக்க, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அதற்கு தகுதியான ஆசிரியர்கள், தங்கள் பெயர் விவரங்களுடன், சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்த
சான்று, இரண்டு ஆண்டு பயிற்சி முடித்தது தொடர்பான, தகுதி காண் பருவ சான்றிதழ் போன்றவற்றை அளிக்கஉத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால், பெரும்பாலான ஆசிரியர்களுக்கு, இன்னும் சான்றிதழின் உண்மை தன்மை கண்டறியப்படவில்லை. அத்துடன், ஆசிரியர்கள் தகுதி காண் பருவம் முடிந்து, எட்டு ஆண்டு ஆன பிறகும், சான்றிதழும் கிடைக்கவில்லை. பள்ளிக்கல்வி துறை, தேர்வுத்துறை அலட்சியத்தால், தகுதி காண் பருவம் முடித்த நுாற்றுக்கணக்கானோருக்கு,சான்றிதழின் உண்மை தன்மை தெரியாமல், பதவி உயர்வு நிராகரிக்கப்பட்டுள்ளது.
- என். இளங்கோ, நிர்வாகி - தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

DIET போட்டித்தேர்வுக்கான பாடத்திட்டம் ஆசிரியர் தேர்வுவாரிய இணயதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கான சீனியர் லெக்சரர். லெக்சரர், ஜுனியர் லெக்சரர் பணிக்கான போட்டித்தேர்வுக்கான பாடத்திட்டம் ஆசிரியர் தேர்வுவாரிய இணயதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.போட்டித்தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது

வியாழன், 25 பிப்ரவரி, 2016

போலீஸ் பாதுகாப்பு கிடைக்காததால்,பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள் கட்டு அனுப்பும் பணி தாமதமாகி உள்ளது

பிளஸ் 2 பொதுத் தேர்வு வினாத்தாள் கட்டுகள், பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன.
ஆனால், சென்னையில் போலீஸ் பாதுகாப்பு கிடைக்காததால், வினாத்தாள் கட்டு அனுப்பும் பணி
தாமதமாகி உள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்க இன்னும், சில நாட்களே உள்ளது. இந்த தேர்வை, ஒன்பது லட்சம்மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும், 2,400 தேர்வு மையங்கள் உள்ளன. சென்னையில், பெரும்பாலான மையங்கள், தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
பிற மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களுக்கு, முதன்மை விடைத்தாள், மாணவர் விவரம் அடங்கிய முகப்புதாள் மற்றும் வினாத்தாள், கடந்த வார இறுதியில் அனுப்பப்பட்டன. அதில், வினாத்தாள் கட்டுகள் சீலிட்ட கவரில்,தாலுகா மற்றும் கல்வி மாவட்ட வாரியாக உள்ள வினாத்தாள் பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த மையங்களில், பகலில், ஒருவர்; இரவில், மூன்று பேர் என, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் மட்டும் பல மையங்களுக்கு இன்னும் வினாத்தாள் அனுப்பப்படவில்லை.
தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:வினாத்தாள் பாதுகாப்பு மையங்களுக்கு, மாவட்ட வாரியாக, இணை இயக்குனர் தலைமையில் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில், இப்பொறுப்பு பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு மையங்களுக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு தேவை. இது தொடர்பாக, போலீசுக்குமுறைப்படி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், போலீசார் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னை யில் பல இடங்களில் போராட்டம், கட்சி கூட்டங்கள், அமைச்சர் நிகழ்ச்சிகள் நடப்பதாக போலீசார்காரணம் கூறுகின்றனர்.
அதனால், சில இடங்களுக்கு மட்டும் வினாத்தாள் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும்,
விரைந்து நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பள்ளி மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க 'ராஷ்ட்ரிய ஆவிஸ்கார் அபியான்' திட்டம்

பள்ளி மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க மத்திய அரசின் புதிய
திட்டமான 'ராஷ்ட்ரிய ஆவிஸ்கார் அபியான்' திட்டம் தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க வேண்டும் என பல்கலைக்கழக
மானியக்குழு மத்திய மனித வளத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்தது. அதற்காக
பல்கலைகள், பள்ளி நிர்வாகத்துடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும்
தெரிவித்தது.இதனால் மத்திய மனித வளத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் அனைவருக்கும் தேசிய கண்டுபிடிப்பு இயக்கத்தை (ராஷ்ட்ரிய ஆவிஸ்கார் அபியான்) அறிமுகம் செய்தது.
டில்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்த திட்டம் ஏற்கனவே ஐந்து மாதங்களுக்கு முன் அறிமுகமாகியது.தமிழகத்தில் நேற்று 18 கல்வி மாவட்டங்களில் துவங்கப்பட்டது.
இதன்மூலம் இளம் விஞ்ஞானிகளாக மாணவர்கள் உருவாக்கப்பட உள்ளனர். இதுதவிர அறிவியல், கணித பாடங்களில் மாணவர்களுக்கு ஈடுபாட்டை அதிகரிப்பது, கண்டுபிடிப்பு திறன்களை வெளிக்கொணர்வதுஉள்ளிட்ட முக்கிய அம்சங்கள் உள்ளன. தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் இந்த திட்டம்துவங்கப்பட்டது. நேற்று திண்டுக்கல் சின்னாளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் துவக்க விழா நடந்தது. இதில்மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் மேரி தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் வேளாங்கன்னி
ஒருங்கிணைப்பாளர்கள் சேசுராஜா பயாஸ், ராஜா முன்னிலை வகித்தனர்.சேசுராஜாபயாஸ் கூறியதாவது: கணிதம், அறிவியல் கற்பித்தலில் எளிமையும், மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும் இந்த திட்டம் பயனளிக்கும். இதன்மூலம் புதிய கண்டுபிடிப்பாளர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம், என்றார்.

தேர்வு நேரத்தில் உடம்பை கவனிப்பது எப்படி?

''தேர்வுக்கு தயாராகும் நேரத்திலும்,தேர்வின் போதும் உடலும், மனதும்தளர்வாக இருக்க வேண்டும். அதற்குதளர்வான காட்டன் ஆடைகள் அணிய வேண்டும்,'' என்கிறார் மதுரை அரசு மருத்துவக்
கல்லுாரி பேராசிரியர் டாக்டர் ஜெ.சங்குமணி.தேர்வுகாலங்களில் மாணவர்கள் உடல்நலத்தை எப்படி
கவனிக்க வேண்டும் என்பது குறித்து அவர்கூறியதாவது:கோடையில் வியர்வை அதிகமாகும்.
காலை, மாலையில் குளிப்பது நல்லது. தடிமனான ஆடைகளை தவிர்த்து இலகுவான காட்டன் ஆடைகள்
அணியவேண்டும். வெயில் காலத்தில் தோல்வெடிப்பு, வியர்க்குரு, கழுத்துப்பகுதி, அக்குளில் வியர்க்குருவால் புண்ணாகலாம். சருமத்தை நன்றாகபராமரிக்க வேண்டும்.தலைக்கு குளித்தால் உடனடியாக முடியை உலரவிட வேண்டும்.வெயில் காலம் என்பதால் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரை பருகுவது நல்லது. தேர்வு நேரத்தில் நாம் நோய்க்குள் சிக்கி விடக்கூடாது. சுகாதாரமற்ற தண்ணீரால் வயிற்றுப்போக்கு, தொண்டைப்புண் ஏற்படும். டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை வர வாய்ப்புள்ளது. எளிதில் நோய் தொற்றும் வாய்ப்பு உள்ளதால் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கலாம். எண்ணெய் கலந்த உணவுகளை குறைத்துக் கொண்டு பழம், காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும். சாப்பிட்டால் துாக்கம் வரும் என நினைத்து சாப்பிடாமல் படிப்பர். அது தவறு. சரியான அளவில், எளிதில் செரிக்கக்கூடிய, தண்ணீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். கடையில் கிடைக்கும் துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது. வயிறு நிறைய சாப்பிடுவதை விட, அளவோடு அடிக்கடி சாப்பிடுவது நல்லது. வயிறு நிறைந்தால் சோம்பல் வரும். ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை பழங்களை சுத்தமாக கழுவி வைத்து, படித்து கொண்டு இருக்கும் போது சாப்பிடலாம். பழங்களில் உள்ள குளுகோஸ் மூளைக்கு உடனடியாக கிடைப்பதால், அனைத்து வகை பழங்களும் சாப்பிடலாம்.மலச்சிக்கல் வராமல் பார்க்க வேண்டும். இதற்கு தண்ணீர்
நிறைய குடிக்க வேண்டும். கேரட், கீரை, பீன்ஸ் ஆகியவை ஞாபகசக்தி அதிகரிப்பதோடு கண் சார்ந்த
பிரச்னைகளை குறைக்கும். சத்துள்ள காய்கறி, பழங்களை சாப்பிட வேண்டும். பிள்ளைகள் நல்ல உடல் நிலையில் இருக்கின்றனரா என பெற்றோர்கண்காணிக்க வேண்டும்.
பல்வலி வருவதை தவிர்க்க காலை மற்றும் இரவில் பல் துலக்க வேண்டும்.படிக்கும்
நிலை(பொசிஷன்) முக்கியம். படுத்துக் கொண்டோ, மல்லாந்து படிக்கவோ கூடாது. வசதியான சேரில்
கால்களை தளர்வாக வைத்துக் கொண்டும், நடந்து கொண்டும் படிக்கலாம். படிப்பதற்கு காற்றோட்டமும்,
வெளிச்சமும் அவசியம். கண்ணாடி அணிபவர்களாக இருந்தால் படிக்கும் போது கண்ணாடி அவசியம்.
இல்லாவிட்டால் தலைவலி வரும். வியர்வையால் சளி பிடித்தாலும் தலைவலி வரும். ஷூ, செருப்பு அதிக இறுக்கமாக இருக்கக்கூடாது. பழைய சாக்ஸ், ஈரமான சாக்ஸ் பயன்படுத்துவதை தவிர்க்கலாம், என்றார்.

புதன், 24 பிப்ரவரி, 2016

10 ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு ரூ.200 கோடி நன்கொடை: குஜராத் வைர வியாபாரி லால்ஜிபாய் படேல் தாராளம்



 பிரதமர் மோடியின் சர்ச்சைக்குரிய கோட் ஆடையை ஏலம் எடுத்த தொழிலதிபர், நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரம் பெண் குழந்தை களின் வாழ்வாதாரத்துக்காக ரூ.200 கோடி நன்கொடை வழங்க முன்வந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடந்த ஆண்டு நடந்த குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக இந்தியா வந் திருந்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி தனது முழு பெயர் பொறித்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோட் அணிந்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து அந்த கோட் ஏலம் விடப்பட்டது. குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியும், தொழிலதிபருமான லால்ஜிபாய் படேல் என்கிற பாட்ஷா என்பவர் ரூ.4.31 கோடிக்கு அதை ஏலத்தில் எடுத்தார். இந்த தொகை கங்கை நதி தூய்மை திட்டத்துக்கும், பெண் கல்விக்காகவும் செலவிடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி அணிந்த கோட் ஆடையை ஏலத் தில் எடுத்த அந்த வைரவியாபாரி படேல் நேற்று திடீரென 10 ஆயிரம் பெண் குழந்தைகளுக்காக ரூ.200 கோடி நன்கொடை வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் வாத்ஸல்யா கிராம அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று படேல் யாரும் எதிர்பாராத சமயத்தில் மேற்கூறிய அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் அவர், ''வரும் மார்ச் 13-ம் தேதி குஜராத்தின் சூரத் நகரில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன். இதற்காக நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரம் பெண் குழந்தைகள் தேர்ந்தெடுக் கப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நன்கொடை வழங்கப் படும். இதன் மூலம் அந்த பெண் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் திருமண வாழ்க்கை பிரச்சினை இல்லாமல் இருக்கும். பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற மத்திய அரசின் விழிப்புணர்வு திட்டத்துக்கு, என்னால் முடிந்த பங்களிப்பாக இந்த தொகையை ஒதுக்கியுள்ளேன்'' என்றார்.

ஏற்கெனவே, பெண் குழந்தை களுக்காக பல்வேறு நன்கொடை களை படேல் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



திங்கள், 22 பிப்ரவரி, 2016

'செட்'தகுதித்தேர்வின் இறுதியில், தேர்வர்கள் வினாத்தாள் எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்படாததால், அதிர்ச்சி

உதவிப் பேராசிரியர்களுக்கான,மாநில அரசின், 'செட்'தகுதித்தேர்வின் இறுதியில், தேர்வர்கள் வினாத்தாள் எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்படாததால்,அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில்,பேராசிரியர் பணியில் சேர்வதற்கான மாநில தகுதித்
தேர்வான, செட் தேர்வு நேற்று நடந்தது. மத்தியஇடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,
நடைமுறைப்படி, தேர்வர்களுக்கு இலவச கறுப்பு,'பால்பாய்ன்ட்' பேனா வழங்கப்பட்டது; மொபைல் போன்கள் தேர்வறையில் தனியாக வைக்கப்பட்டன. மொத்தம் மூன்று தாள்கள் அடங்கிய தேர்வு, காலை, 9:30 மணி முதல் மாலை, 4:30 மணி வரை, மூன்றுகட்டங்களாக நடந்தது. ஆங்கிலம் மற்றும் தமிழில் வினாத்தாள்கள் இருந்தன.'ப்ளூ பிரின்ட்' படி, கேள்விகள் இடம்பெறவில்லை. நான்கு வகை வினாத்தாளுக்கு பதில், ஒரே வினாத்தாளே வழங்கியதால், தேர்வர்கள், 'காப்பி'யடிக்க வாய்ப்பாக இருந்தது; தேர்வறை சோதனைக்கு, பறக்கும் படைஅமைக்கவில்லை. நெட் தேர்வை போல், செட் தேர்விலும் விடைத்தாள் நகல் வழங்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது; இதுகுறித்து
தேர்வு மையத்தில் எந்த அறிவிப்பும் இல்லை; தேர்வு முடிந்ததும் விடைத்தாளுடன் வினாத்தாளையும் எடுத்துச்சென்றதால், தேர்வர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'வாட்ச்' அணிய தடை:வினாத்தாளை வெளியே கொண்டு வர அனுமதிக்கவில்லை. அதனால், மாணவர்கள் எதிர்காலத்தில் செட் தேர்வுக்கு தயாராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் நெட் தேர்வில்வினாத்தாளுடன் விடைத்தாள் நகலும் வழங்கப்படும். ஆனால், இந்த தேர்வில் அப்படி வழங்கவில்லை.- மணிகண்டன்,

தேர்வர் தேர்வு மையங்களை, நேற்று முன்தினம் இரவோடு இரவாக மாற்றியதால், தேர்வு மையம் தெரியாமல் தேர்வர்கள் தவித்தனர். காலையில் தேர்வு துவங்குவதற்குள், 'ஹால் டிக்கெட்' பிரின்ட் எடுக்க தேர்வர்கள் அவதிப்பட்டனர். ஞாயிற்றுக் கிழமை என்பதால் இணையதள மையங்கள் கிடைக்காமல் பல தேர்வர்கள், தேர்வில் பங்கேற்க முடியவில்லை.தேர்வர்கள் வாட்ச் அணிய தடை விதிக்கப்பட்டது. ஆனால்,தேர்வறையில் கடிகாரம் இல்லாததால் பிறகு வாட்ச்அனுமதிக்கப்பட்டது. தேர்வை அவசர கதியில் அறிவித்து நடத்தியதால், சில பிரச்னைகள் இருந்தன. வினாத்தாளில், தமிழ், ஆங்கில
வினாக்களின் மொழி மாற்றத்தில் சில பிழைகள் இருந்தன. எனவே, 'கீ - ஆன்சர்' தயாரிக்கும் போது பிரச்னை ஏற்படலாம். அதை பல்கலை அதிகாரிகள் தற்போதே முன்னெச்சரிக்கையுடன் சரி செய்ய வேண்டும்.- சாமிநாதன்,'நெட், செட்' தேர்வர்கள் சங்க ஆலோசகர்

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகள் உட்பட 11 அறிவிப்புகள்: சட்டப்பேரவையில் முதல்வர்


தமிழக முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்

அரசு ஊழியர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்களுக்கான குடும்ப நல நிதி உயர்வு, கவுரவ விரைவுரையாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் சட்டப்பேரவையில் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா,

"அரசின் அடித்தளமாக, அச்சாணியாக, முதுகெலும்பாக விளங்குபவர்கள் அரசு அலுவலர்கள். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலர்களின் நலனில் எப்போதும் தனி அக்கறை கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

அரசு அலுவலர்கள் பணி தொடர்பாகவும், ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பாகவும் பல்வேறு கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.

அரசு அலுவலர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை ஆராயும்படி மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர், நிதித் துறை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தேன்.

அதன்படி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு அரசு அலுவலர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி உள்ளனர். அதன் அடிப்படையில் அரசு அலுவலர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

1) குடும்ப நல நிதி உயர்வு:

கடந்த 40 ஆண்டுகளாக அரசு அலுவலர்களுக்கு குடும்பநல நிதித் திட்டம் என்ற ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு அரசு அலுவலர்களிடமிருந்து மாதந்தோறும் அவர்களது சம்பளத்திலிருந்து 30 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்படி, பணிக் காலத்தில் அரசு அலுவலர் இறந்தால், அவரின் வாரிசுதாரருக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், வழங்கப்படுகிறது.

இந்த குடும்ப நல நிதி உதவியை, உயர்த்த வேண்டுமென பல்வேறு சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதனை ஏற்று, இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை 3 லட்சம் ரூபாய் என உயர்த்தப்படும். அரசு அலுவலரின் சம்பளத்திலிருந்து மாதந்தோறும் 60 ரூபாய் இதற்காக பிடித்தம் செய்யப்படும். தற்போது, இத்திட்டத்திற்கு அரசு மானியமாக ஆண்டுதோறும் 6 கோடியே 18 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. குடும்ப நல நிதி உதவித் தொகை உயர்த்தப்படுவதால் ஏற்படும் கூடுதல் செலவான சுமார் 6 கோடி ரூபாயை அரசு வழங்கும்.

2) குழுக் காப்பீட்டுத் திட்டம் உயர்வு:

அரசு உதவி பெறும் அனைத்து கல்வி நிறுவனங்களில் பணி புரியும் அலுவலர்கள், மற்றும் ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள்; உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராம ஊராட்சிகளின் பணியாளர்கள் ஆகியோருக்கு குழுக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்திற்கு காப்பீட்டுத் தொகையாக அரசு அலுவலர்களிடமிருந்து 30 ரூபாய் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படுகிறது. சராசரியாக ஆண்டொன்றுக்கு 15 கோடி ரூபாய் அலுவலர்களிடமிருந்து காப்பீட்டுத் தொகை பங்களிப்பாக பெறப்படுகிறது.

ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு சராசரியாக செலுத்தப்படும் காப்பீட்டுப் பிரிமியம் தொகை 37 கோடி ரூபாய் ஆகும். அதாவது அரசு அலுவலர்களின் பங்களிப்பு நீங்கலாக, இத்திட்டத்திற்கு அரசு ஆண்டொன்றுக்கு 22 கோடி ரூபாய் வழங்கி வருகிறது. இந்தக் குழுக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

அலுவலர்கள் தற்போது செலுத்தும் பங்களிப்பு 60 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படும். காப்பீட்டுத் தொகை 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 20 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

3) கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்ளுக்கு ஆண்டு ஊதிய உயர்வு:

கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி வரன்முறை கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட அரசு அலுவலர்கள் பணி வரன்முறை செய்யப்பட்ட பின்னரே, ஊதிய உயர்வு போன்ற பல்வேறு பணிப் பலன்களை அவர்கள் பெற இயலும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியுள்ளதால், இதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இதனைத் தவிர்க்கும் வகையில் 1.2.2016 வரை கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு, எந்தவித விதித் தளர்வும் தேவைப்படாத அனைத்து நபர்களின் பணி நியமனமும், பொது அரசாணை மூலமாக முறைப்படுத்தப்படும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டிய பதவிகளுக்கு, பொதுவான அரசாணை, வெளியிடப்பட்ட பின்னர் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்படும். விதித் தளர்வு தேவைப்படும் அலுவலர்களைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் பெற்று விதிகளைத் தளர்வு செய்வதற்கான அரசாணைகள் வெளியிடப்படும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் பெறப்படும் வரையில் அவர்களை தற்காலிக அரசு அலுவலர்களாகக் கருதி, அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்க வகை செய்யப்படும்.

4) அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு

அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர்கள் ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம், 1,000 ரூபாயாக, 1.4.2013 முதல் உயர்த்தப்பட்டது.

இந்த ஓய்வூதியம் 1,500 ரூபாயாக உயர்த்தப்படும். 39,809 ஓய்வு பெற்ற அங்கன்வாடிப் பணியாளர்கள், 47,064 ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் என மொத்தம் 86,873 பணியாளர்கள் இதனால் பயன் பெறுவார்கள். இதனால், அரசுக்கு ஆண்டுதோறும் 51 கோடியே 13 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். சத்துணவுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணப் பயன் 50,000 ரூபாயிலிருந்து 60,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

சமையலர்களுக்கு வழங்கப்படும் பணப் பயன் 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாய் எனவும்; சமையல் உதவியாளர்களுக்கு, வழங்கப்படும் பணப் பயன் 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாய் எனவும் உயர்த்தப்படும்.

5) பணிக்கால தகுதி குறைப்பு:

ஊரக வளர்ச்சித் துறை பொறியியல் அலுவலர்கள் ஊரக வளர்ச்சித் துறையில் பட்டயப் படிப்பு முடித்துள்ள மேற்பார்வையாளர்களுக்கு, இளநிலைப் பொறியாளராக பதவி உயர்வு பெறுவதற்கான பணிக் காலத் தகுதி 10 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுகளாகக் குறைக்கப்படும். பொறியியல் பட்டப் படிப்பு முடித்துள்ள மேற்பார்வையாளர்களுக்கு, இப்பணிக் காலத் தகுதி 5 ஆண்டுகளிலிருந்து 4 ஆண்டுகளாகக் குறைக்கப்படும்.

6) உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு கணக்குத் தேர்வு ரத்து:

பள்ளிக் கல்வித் துறை இரண்டாம் நிலை உடற்பயிற்சி இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ள உடற்பயிற்சி ஆசிரியர்கள் கணக்குத் தேர்வு பெற வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்படும்.

7) கிராம சுகாதார செவிலியர்களுக்கு, துறை சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு

மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இணை பேராசியர்களாகப் பணி புரியும், 157 மருத்துவர்களுக்கு, பேராசியர் பதவி உயர்வு வழங்கப்படும். தொகுப்பூதியத்தில் பணி புரியும் செவிலியர்களில், பணி மூப்பு அடிப்படையில் 1,500 செவிலியர்கள் காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள். பணி மூப்பு அடிப்படையில் 605 கிராம சுகாதார செவிலியர்களுக்கு, துறை சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும்.

8) கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு:

உயர்கல்வித் துறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, வழங்கப்படும் மாத மதிப்பூதியம் 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

9) அரசு அலுவலர்கள் வழக்கை விசாரிக்க தீர்ப்பாயம்:

தமிழ்நாடு நிர்வாகத் தீர்ப்பாயம் அரசு அலுவலர்கள் பணி சார்ந்த வழக்குகளை நிர்வாகத் தீர்ப்பாயத்தில் தொடுத்து வந்தனர். தற்போது இந்த ஆணையம் இல்லாத காரணத்தால், இந்த வழக்குகள் உயர்நீதி மன்றத்தில் தான் தொடுக்கப்படுகின்றன. அரசு அலுவலர்களின் வழக்குகளை விசாரிக்க நிர்வாகத் தீர்ப்பாயம் எற்படுத்தப்பட வேண்டும் என அரசு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை ஏற்று, நிர்வாகத் தீர்ப்பாயம் மீண்டும் ஏற்படுத்தப்படும்.

10) பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராய வல்லுநர்க் குழு:

1.4.2003 முதல் அரசுப் பணியில் சேர்ந்துள்ள அரசு அலுவலர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதியப் பங்களிப்புத் தொகையும், அரசின் பங்களிப்புத் தொகையும், இவற்றிற்கான வட்டித் தொகையும் அரசுக் கணக்கில் தனியே வைக்கப்பட்டுள்ளன.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டிய தொகை உடனடியாக வழங்கப்படும்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே, செயல்படுத்திட வேண்டும் என பல்வேறு அரசு அலுவலர் சங்கங்கள் கோரி வருகின்றன. இந்த கோரிக்கை குறித்து தீவிரமாக ஆராயப்பட வேண்டும். எனவே, இது பற்றி ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுநர்க் குழு ஒன்று அமைக்கப்படும். அந்த வல்லுநர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தக்க முடிவு எடுக்கப்படும்.

11) ஊதிய விகிதங்கள் மாற்றம் குறித்து ஊதியக் குழு பரிசீலிக்கும்:

ஊதிய விகிதங்கள் தொடர்பான கோரிக்கைகள் ஊதிய விகிதங்களை மாற்றியமைத்தல், தொகுப்பூதியத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களை, காலமுறை ஊதியத்தின் கீழ்க் கொண்டு வருதல், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வருவோருக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்குதல், போன்றவை குறித்து, பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இக்கோரிக்கைகள், பல்வேறு அரசு அலுவலர்களின் ஊதிய விகிதங்களை ஒப்பிட்டு, அவர்களின் அதிகார நிலை மற்றும் துறைகளின் ஒப்புநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பரிசீலிக்கப்பட வேண்டும்.

எனவே, இத்தகைய கோரிக்கைகளை ஊதியக் குழுவே பரிசீலிக்க இயலும் என்பதால், இந்த கோரிக்கைகள் அனைத்தும் எதிர் வரும் ஊதியக் குழு மூலம் பரிசீலிக்கப்படும்.

எனது இந்த அறிவிப்புகள் அரசு அலுவலர்கள் புதிய உத்வேகத்துடன் பணிபுரிய வழிவகுக்கும் என நான் நம்புகிறேன்.


குடும்ப நல நிதி ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயரத்தப்படுகிறது முதல்வர் , 110 விதியின் கீழ் சட்டசபையில், புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்

சென்னை : அரசு ஊழியர்கள் நலனில் தனி அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிக்க முடிவு செய்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான குடும்ப நல நிதி ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயரத்தப்படுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா, 110 விதியின் கீழ் சட்டசபையில், புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் அவர் பேசியதாவது, குழு காப்பீட்டு தொகை ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்படுகிறது. கருணைமுறையில், பணிவரன்முறை செய்யப்பட்டவர்களுக்கு, சம்பள உயர்வு, குடும்ப நல நிதி திட்டத்திற்காக ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ரூ. 60 பிடித்தம் செய்யப்படும் என்று ஜெயலலிதா கூறினார்.

சட்டசபையில் வேலைநிறுத்தம் குறித்து பேசிய போது அமைச்சர்கள் மவுனம்

அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக, கம்யூ.,- எம்.எல்.ஏ.,க்கள் பேசியதற்கு, அரசு தரப்பில் எந்தப் பதிலும் தெரிவிக்கப்படவில்லை.சட்டசபையில், மார்க்.கம்யூ., - எம்.எல்.ஏ., பாலபாரதி,
நேற்று பேசியதாவது:தேர்தல் வாக்குறுதிகள்அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக, முதல்வர்
தெரிவித்தார்; ஆனால், பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 'அரசு ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்துவோம்; ஊதிய
முரண்பாடுகளை களைவோம்' என, வாக்குறுதி அளித்தீர்கள்; அதை நிறைவேற்றவில்லை.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல சாதனைகள செய்ததாகக் கூறுகிறீர்கள். அதற்கு உதவிய அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு, செவி சாய்க்காமல் உள்ளீர்கள்; அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தால், தேர்தல் பணி பாதிக்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அரசு, அவர்களை அழைத்து பேசி, சுமுக தீர்வு காண வேண்டும்.இவ்வாறு பாலபாரதி பேசினார்.
இ.கம்யூ., - எம்.எல்.ஏ., குணசேகரன் பேசும்போது, ''கோரிக்கைகளை
வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள்,
மாற்றுத்திறனாளிகளை அழைத்து பேசி, சுமுக தீர்வு காண வேண்டும்,'' என்றார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எந்த குற்றச்சாட்டை கூறினாலும், உடனுக்குடன் குறுக்கிட்டு பேசிய
அமைச்சர்கள், அரசு ஊழியர் வேலைநிறுத்தம் குறித்து பேசிய போது, எந்த பதிலும் தெரிவிக்காமல் மவுனம் காத்தனர்.

251 ரூபாய்க்கு மொபைல் எப்படி சாத்தியம்? :ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் சத்தா.

251 ரூபாய்க்கு எப்படி சாத்தியம்? :ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் சத்தா கூறியதாவது:
இந்த மொபைல் போனின் தயாரிப்பு செலவு, 2,500 ரூபாய். ஆனால், விற்பனையில் புதுமை, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வரி சலுகை போன்ற பல்வேறு காரணங்களால், இந்த போனை, 251 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், மொபைல்
போன் உதிரி பாகங்களுக்கு, 13.8 சதவீதம், வரி சலுகை கிடைக்கிறது. அதாவது, ஒரு மொபைல் போனுக்கு, 470 ரூபாய் வரை சலுகை கிடைக்கிறது. மிக அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது, ஒரு மொபைலுக்கு, 530 ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம். நேரடி விற்பனையில்லாமல், 'ஆன்லைன்' மூலமாக விற்பதால், 460 ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம். இவ்வாறு, பல்வேறு வகையில் சேமிக்கப்படும் தொகையை, வாடிக்கையாளருக்கே தருகிறோம். வரி சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுக்கு பின், 800 ரூபாய்க்கு இந்த போனை விற்க வேண்டும்; ஆனால், 251 ரூபாய்க்கு விற்கிறோம். மிகக் குறைந்த விலையில் விற்பதால், சந்தையில் மிகப் பெரிய இடத்தைப் பிடிப்போம். சந்தையில் மிகப் பெரிய இடத்தைப் பிடிக்கும்போது, பல்வேறு பொருட்களை நாங்கள் விற்க முடியும்; அந்த வகையில், இந்த இழப்பை ஈடுகட்ட முடியும். எங்கள் நிறுவனத்தை, 'ஆன்லைன் ஷாப்பிங் மாலாக' மாற்ற திட்டமிட்டுள்ளோம். அனைத்து பொருட்களும் எங்களிடம் கிடைக்கும். நாங்கள் மிகப் பெரிய லாபத்தை எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.251க்கு மலிவு விலை போன் கிடைக்கும்?வாய்ப்பே இல்லை!-இந்திய செல்லுலார் சங்கம்.

ரூ.251க்கு மலிவு விலை போன் கிடைக்கும் என...... முன்பதிவு முடங்கினாலும் நிறுவனம் உறுதி புதுடில்லி: உலகின், மிக மலிவான, 'பிரீடம் 251' என்ற, ஸ்மார்ட் மொபைல் போன் குறித்து, பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில், 'திட்டமிட்டபடி, 251 ரூபாய்க்கு மொபைல் போனை வழங்குவோம்' என, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, நேற்று, போனுக்கான முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே, வினாடிக்கு, ஆறு லட்சம் பேர் முயற்சித்ததால் இணையதளம் முடங்கியது. டில்லியை அடுத்துள்ள நொய்டாவை தலைமையிடமாக வைத்து, 'ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனம், 251 ரூபாய் விலை உடைய, ஸ்மார்ட் மொபைல் போனை, நேற்று முன்தினம் அறிமுகம்
செய்தது.
நான்கு மாதத்துக்குள்... : நேற்று காலை, 6:00 மணிக்கு முன்பதிவு துவங்கியது. 'முன்பதிவு செய்தவர்களுக்கு, நான்கு மாதத்துக்குள் மொபைல் போன் அனுப்பி வைக்கப்படும்' என, அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. நேற்று காலை, முன்பதிவு துவங்கிய, சில நிமிடங்களிலேயே, அதன் இணையதளம் முடங்கியது. 'வினாடிக்கு, ஆறு லட்சம் பேர் முயற்சி செய்ததால், முன்பதிவு செய்ய முடியவில்லை. இந்த தொழில்நுட்ப பிரச்னையை சரி செய்வதற்கு, 24 மணி நேரம் ஆகும்; அதற்கு பின், மீண்டும் முன்பதிவு துவங்கும்' என, ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாத்தியக்கூறுகள்: மலிவு விலைக்கு மொபைல் போன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, மொபைல் போன் தயாரிப்பு சங்கங்கள் சந்தேகங்களை கிளப்பிஉள்ளன. ஆனாலும், 'திட்டமிட்டபடி, 251 ரூபாய்க்கு மொபைல் போனை வழங்குவோம்' என, ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மேக் இன் இந்தியாவா; மேட் இன் சீனாவா? *''சார்ஜர் மற்றும் கம்ப்யூட்டருடன் இணைக்கக் கூடிய கேபிள் போன்ற பொருட்களே, 250 ரூபாய்க்கும் அதிகமான விலையில் தான் விற்கப்படுகின்றன. இது போன்ற சூழ்நிலையில், அதிக வசதிகள் உடைய மொபைல் போனை, இந்த விலைக்கு விற்பது சாத்தியமல்ல,'' என, பிரபல தொழில்நுட்ப பத்திரிகையாளர் அசீம் மன்சந்தா கூறினார்.

*பிரீடம் 251 அறிமுக விழாவில் பங்கேற்ற பத்திரிகையாளர்களுக்கு, அதன் மாதிரி காண்பிக்கப்பட்டது. சீனாவில் தயாரிக்கப்படும், 4,000 ரூபாய் விலையுள்ள, 'ஆட்காம் ஐகான்-4' என்ற ஸ்மார்ட்போனை போலவே, இந்த மொபைல் இருப்பதாக, மூத்தபத்திரிகையாளர்கள் கூறினர்.
* 'மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், இந்த மொபைலை தயாரிப்பதாக, ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. மேக் இன் இந்தியா என்ற பெயரில், 'மேட் இன் சீனா' பொருளை, இந்தியாவில் விற்க நடக்கும் சதியாக இது இருக்கலாம்' என, தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறினர்.l
'டேடாவிண்ட் என்ற நிறுவனம், உலகிலேயே மிகவும் விலை குறைந்த, 'ஆகாஷ் டேப்லட்'களை, இந்தியாவில், 2,500 ரூபாய்க்கு தருவதாக அறிவித்திருந்தது. 40 லட்சம் பேர் முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்தனர். ஆனால், 2.5 லட்சம் பேருக்கு மட்டுமே இந்த டேப்லட் கிடைத்தது; அதுவும் தரமில்லாததாக இருந்தது. பழுதானால், சரி செய்யக் கூடிய வசதியையும் அந்த நிறுவனம் செய்யவில்லை. அது போன்ற, மோசடியாக, இந்த புதிய மொபைல் நிறுவனத்தின் அறிவிப்பு இருக்கலாம்' என்ற சந்தேகத்தையும் சிலர் எழுப்பியுள்ளனர்.
வாய்ப்பே இல்லை: சங்கம் எதிர்ப்பு 'ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளபடி, 251 ரூபாய்க்கு, ஸ்மார்ட் மொபைல் போனை விற்கவே முடியாது; இது குறித்து, மத்திய அரசு விசாரிக்க வேண்டும்' என, மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு, இந்திய செல்லுலார் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.சங்கத் தலைவர் பங்கஜ் மோகிந்த்ரூ எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியாவில், மொபைல் போன் தயாரிப்புக்கென, அரசு எந்தவித மானியமோ, சலுகையோஅளிப்பதில்லை. 3,500 ரூபாய்க்கும் குறைவான விலையில், ஸ்மார்ட் மொபைல் போன்களை விற்க முடியாது.இந்த நிறுவனம், இதுவரை மொபைல் தயாரிப்பில் ஈடுபட்டதில்லை. '251 ரூபாய்க்கு மொபைல் போன்' என அறிவிப்பு வந்ததுமே, பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இது குறித்து தொலைத்தொடர்பு துறை தீவிரமாக ஆராய வேண்டும்.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

PG TRB :படியுங்கள், படித்து கொண்டே இருங்கள் நம்பிக்கையுடன்!

Pg trb எதிர்பார்த்து கொண்டு இருக்கும் நண்பர்கள தயவு செய்து தேர்வு எப்போது வரும் என்ற கேள்வியை தவிர்த்து நன்றாக படித்து கொண்டு மட்டும் இருங்கள். தேர்வு அறிவுக்கும் போது நீங்கள் தான் நன்றாக படித்து இருப்பீர்கள் வெற்றியும் உங்களுடயதே. நன்றாக படியுங்கள், படித்து கொண்டே இருங்கள் நம்பிக்கையுடன்.

PG TRB: படியுங்கள், படித்து கொண்டே இருங்கள் நம்பிக்கையுடன்.

Pg trb எதிர்பார்த்து கொண்டு இருக்கும் நண்பர்கள தயவு செய்து தேர்வு எப்போது வரும் என்ற கேள்வியை தவிர்த்து நன்றாக படித்து கொண்டு மட்டும் இருங்கள். தேர்வு அறிவுக்கும் போது நீங்கள் தான் நன்றாக படித்து இருப்பீர்கள் வெற்றியும் உங்களுடயதே. நன்றாக படியுங்கள், பபடித்து கொண்டே இருங்கள் நம்பிக்கையுடன்.

தமிழக 'செட்' தேர்வு : நுழைவுச்சீட்டு தேர்வுக்கூட முகவரியுடன் வெளியிடப்பட்டுள்ளது

தமிழக அரசின் உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'செட்' தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தேர்வுக்கூட முகவரியுடன் வெளியிடப்பட்டுள்ளது
கல்லுாரி மற்றும் பல்கலைகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின்,
'நெட்' அல்லது மாநில அரசின், 'செட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில், 'நெட்' தேர்வை, கடுமையான கட்டுப்பாடுகள், தரமான வினாத்தாளுடன், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான,சி.பி.எஸ்.இ., நடத்துகிறது; 'செட்' தேர்வு, மாநில அரசால் நடத்தப்படுகிறது.பாரதியார் பல்கலை, 2012ல் நடத்திய, 'செட்' தேர்வுக்கு பின் தற்போது, அன்னை தெரசா பல்கலை மூலம் புதிய, 'செட்' தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது; பிப்., 21ல்தேர்வுநடக்கிறது. விண்ணப்பித்தோர் http:/www.setexam2016.in/ எனும் முகவரியில் நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம்

SET 2016 Date of Examination : 21.02.2016

முதல்வர் ஜெயலலிதா பாணியில்,'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களிடம்,கல்வித் துறை செயலர் சபிதாஅடிக்கடி ஆலோசனை நடத்துவதால், கல்வித்துறை பணிகள்கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

முதல்வர் ஜெயலலிதா பாணியில்,'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களிடம்,கல்வித் துறை செயலர் சபிதாஅடிக்கடி ஆலோசனை நடத்துவதால், கல்வித்துறை பணிகள்கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

புதிய கட்டடம், பாலம் திறப்பு என, பெரும்பாலானநிகழ்ச்சிகளை, முதல்வர் ஜெயலலிதா, வீடியோகான்பரன்சில் நடத்துகிறார். போக்குவரத்துநெரிசல், ஆடம்பரம் தவிர்க்க, எளிமையாக இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், களத்தில் இறங்கி,உண்மை நிலையை தெரிந்து செயல்பட வேண்டிய அதிகாரிகள், வீடியோ கான்பரன்ஸ் முறையில் அடிக்கடிகூட்டம் நடத்துவதால், கல்வித் துறையில் பிரச்னைகள் அதிகரித்துள்ளன.

தமிழக பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் சபிதா, வீடியோ கான்பரன்ஸ் முறையில் நேற்று, மாவட்ட சி.இ.ஓ.,க்களிடம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன்,அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டமான ஆர்.எம்.எஸ்.ஏ., இயக்குனர் அறிவொளி உள்ளிட்டஉயரதிகாரிகள் பங்கேற்றனர். அடிக்கடி இது போன்ற கூட்டங்கள் நடத்துவதால், அன்றாட பணிகள்பாதிக்கப்படுவதாக, அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

இதுகுறித்து, கல்வித் துறை வட்டாரம் கூறியதாவது:அடிக்கடி, 'மீட்டிங்' நடக்கிறது. அதிகாரிகள்பெரும்பாலும், தலைமைச் செயலகத்தில், செயலர் நடத்தும் கூட்டங்களில் தான் இருக்கின்றனர்; கோப்புகளைபார்க்க நேரம் இல்லை. கூட்டம் முடித்து மாலையில் வருகின்றனர்; இரவு உட்கார்ந்து, 'பைல்' பார்க்கவேண்டியுள்ளது. அதனால், முக்கியமான பைல்களை, உரிய நேரத்தில் பார்க்க முடிவதில்லை. எல்லாவற்றுக்கும்,செயலக உத்தரவையே எதிர்பார்க்க வேண்டியுள்ளது. மீட்டிங் என, அதிகாரிகள் சென்று விடுவதால், இயக்குனர்அலுவலகங்களில் எந்த வேலையும் நடப்பதில்லை. வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர், அதிகாரிகளை பார்க்க முடிவதில்லை. செயலகம் சென்றால், அங்கிருந்து இயக்குனர் அலுவலகத்துக்கு திருப்பிஅனுப்புகின்றனர். இதேநிலை தொடர்ந்தால், கல்விப் பணிகளில் பெரும்பாலான திட்டங்கள் அறிவிப்போடுநிற்பதும், பெயரளவில் அமல்படுத்துவதுமே தொடர் கதையாக இருக்கும். இயக்குனர் அலுவலகங்களையும்,செயலகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.

News :dinamalar

தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்

தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் தாக்கல் செய்தார். மாநில பேரிடர் நிவாரண நிதியத்துக்கு ரூ.713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 20-ம் தேதி தொடங்கியது. பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா உரையாற்றினார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாட்கள் விவாதம் நடந்தது. விவாதங்களுக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா 22-ம் தேதி உரையாற்றினார். அத்துடன் தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கமாக, ஆளுநர் உரையைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். ஆனால், பொதுத் தேர்தல் நடக்கவுள்ளதால் இப்போது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரையிலான அரசின் செலவுகளுக்கு நிதி ஒதுக்கும் வகையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்து அமையும் புதிய அரசு, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாகக் கூறினார்.

தமிழக இடைக்கால பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:

* காவல்துறைக்கு ரூ.6099 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

* தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.32.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

* மாநில பேரிடர் நிதியத்துக்கு ரூ.713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

* தீயணைப்பு துறைக்கு ரூ.227 கோடி நிதி ஒதுக்கீடு.

* சிறைச்சாலை துறைக்கு ரூ.281 கோடி நிதி ஒதுக்கீடு.

* வேளாண்துறைக்கு ரூ.6938.57 கோடி நிதி ஒதுக்கீடு.

* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.8,486.26 கோடி ஒதுக்கீடு.

* மின்சாரதுறைக்கு ரூ.13,819.03 கோடி நிதி ஒதுக்கீடு.

* போக்குவரத்துத் துறைக்கு ரூ.1590 கோடி நிதி ஒதுக்கீடு.

* குறு, சிறு, நடுத்தர தொழில்துறைக்கு ரூ.348 கோடி நிதி ஒதுக்கீடு.

* ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.18,500 கோடி நிதி ஒதுக்கீடு.

* மீன்வளத்துறைக்கு ரூ.742.99 கோடி நிதி ஒதுக்கீடு.

* பால்வளத்துறைக்கு ரூ.119.62 கோடி நிதி ஒதுக்கீடு.

* கால்நடைத்துறைக்கு ரூ.1188.88 கோடி நிதி ஒதுக்கீடு.

* நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.12,194.21 கோடி நிதி ஒதுக்கீடு

* குடிநீர் வழங்கல் திட்டங்களுக்காக ரூ.1802 கோடி நிதி ஒதுக்கீடு.

அவிநாசி - அத்திக்கடவு திட்டம் அறிவிப்பு:

அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு திருத்திய கருத்து அனுப்பப்படும். திட்டத்துக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என பன்னீர்செல்வம் அறிவித்தார்.

 

சனி, 13 பிப்ரவரி, 2016

பள்ளிக்கல்வித்துறை :1062 முதுகலை ஆசிரியர்கள் நியமன அரசாணை வெளியீடு

பள்ளிக்கல்வித்துறை சார்பில் 1062 முதுகலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நியமனம் செய்ய அரசாணை (2டி) எண் 24 நாள் 10.02.16 வெளியிடப்பட்டுள்ளது மொத்தமுள்ள 2125 பணியிடங்களில் 1062 பணியிடங்கள் நேரடி போட்டித்தேர்வின் மூலம் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இனி தொடர்பணியை பள்ளிக்கல்வி இயக்குனரும் ஆசிரியர் தேர்வு வாரியமும் மேற்கொள்ளும்பட்சத்தில் விரைவில் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

ஐஐடி.யில் படிக்கும் வெல்டிங் தொழிலாளியின் மகனுக்கு ரூ.1 கோடி சம்பளத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில்



வாத்ஸல்ய சிங்
வாத்ஸல்ய சிங்

பிஹாரின் கஹரியா மாவட்டத்தில் உள்ள சன்ஹோலி குக்கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரகாந்த். வெல்டிங் தொழிலில் ஈடுபட்டு வரும் இவருக்கு 6 குழந்தைகள். ஏழ்மை காரணமாக குழந்தைகள் அனைவரையும் சந்திரகாந்த் அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். அவர்களில் மூத்த மகனான வாத்ஸல்ய சிங் சவுஹான், 12-ம் வகுப்பு இறுதித் தேர்வில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்று ஐஐடியில் சேருவதற்காக ராஜஸ்தானில் உள்ள கோட்டாவுக்கு வந்தார். அங்குள்ள தனியார் பயிற்சி மையம் வாத்ஸல்ய சிங்கை அரவணைத்து நன்கு பயிற்சி அளித்தது. இதனால் அகில இந்திய அளவில் நடந்த ஐஐடி-ஜேஇஇ நுழைவுத் தேர்வில் 382வது ரேங்க் பிடித்து கரக்பூரில் உள்ள ஐஐடியில் பி.டெக் பட்டப்படிப்பில் சேர்ந்தார். கடந்த டிசம்பர் மாதம் இங்கு நடந்த நேர்முக வளாகத் தேர்விலும் வாத்ஸல்ய சிங் கலந்து கொண்டார். அப்போது அவரது திறமையை கண்டு வியந்த அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் வாத்ஸல்ய சிங்குக்கு வேலைவாய்ப்பு அளிக்க முன்வந் தது. மேலும் அதற்கான பணி நியமன ஆணையையும் வழங்கியது.

ஆந்த ஆணையை பிரித்துப் பார்த்த வாத்ஸல்ய சிங் அப்படியே இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார். ஆண்டுக்கு ரூ.1.02 கோடி சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்ததை படித்து நெகிழ்ந்து போனார்.

இது குறித்து அவர் கூறும்போது, ''ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துவிட்டது என தந்தையிடம் தெரிவித்தபோது முதலில் அவர் நம்ப மறுத்தார். உண்மை என்று உறுதியானதும் அவரால் பேசவே முடியவில்லை. வரும் ஜூன் மாதத்தில் பி.டெக் பட்டப்படிப்பு முடித்ததும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணையவுள்ளேன். இந்த வேலையால் எனது குடும்பத்தின் வறுமை அடியோடு நீங்கும்'' என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இது குறித்து வாத்ஸல்ய சிங்கின் தந்தை சந்திர காந்த் கூறும்போது, ''மகனுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்த செய்தியை அறிந்ததும் நாங்கள் அனைவரும் ஆனந்தக் கண்ணீர் வடித்தோம். கடன் பெற்று மகனை படிக்க வைத்ததற்கு நல்ல பலன் கிடைத்துவிட்டது'' என்றார்.

வாத்ஸல்யாவின் தம்பி தற்போது டெல்லி ஐஐடியில் சேருவதற்கு முயற்சித்து வருகிறார். அவரது தங்கை ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு தனியார் பயிற்சி மையம் மூலம் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு தயாராகி வருகிறார்.


சிஎஸ்ஐஆர் நடத்தும் நெட்’ தேர்வுக்கு எம்எஸ்சி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

'சிஎஸ்ஐஆர் அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிப்பதாவது:கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில்கணிதம் மற்றும் அறி வியல் சம்பந்தப்பட்ட பாடங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு அறிவியல் தொழில் ஆராய்ச்சிக் குழு (சிஎஸ்ஐஆர்) நடத்தும் நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.அந்த வகையில் இந்த ஆண்டுக் கான முதலாவது தகுதித்தேர்வு ஜூன் மாதம் 19-ம் தேதி நடை பெற உள்ளது. தமிழகத்தில் சென்னையிலும், காரைக்குடியிலும் தேர்வு நடக்கும்.

கணிதம், இயற்பி யல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களில் எம்எஸ்சி பட்டம் பெற்றவர்கள் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 55% மதிப்பெண் அவசியம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு 50% மதிப்பெண் போதுமானது. எம்எஸ்சி இறுதி ஆண்டு படிக்கும்
மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.தகுதியுடையவர்கள் பிப்ரவரி 29-ம் தேதிக்குள் ஆன்லை னில் (www.csirhrdg.res.in) விண்ணப் பிக்க வேண்டும். ஆன்லைன் விண் ணப்பத்தை பிரின்ட் அவுட் எடுத்து போட்டோ ஒட்டி, கையெழுத்திட்டு, தேர்வுக்கட்டணம் மற்றும் தேவை யான இதர ஆவணங்களுடன் மார்ச் 7-ம் தேதிக்குள் டில்லிக்குஅனுப்ப வேண்