வியாழன், 28 ஏப்ரல், 2016

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி செயற்கைக்கோள்

கடல்சார் ஆராய்ச்சிக்கான ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று(வியாழக்கிழமை) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் கடல் சார்ந்த ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்ப
முடிவு செய்யப்பட்டதில் 6 செயற்கைக் கோள்கள் ஏற்கெனவே விண்ணில் செலுத்தப்பட்டன. இந்நிலையில் 7-வது செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட் டவுன் கடந்த செவ்வாய்க்கிழமைகாலை 9.20 மணியளவில் தொடங்கியது. 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஜி செயற்கைக்கோள்இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது. இதன்மூலம் இந்தியா ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்றுள்ளது. மேலும், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய
நாடுகளை அடுத்து இந்த தொழில்நுட்பத்தை சொந்தமாக பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியா
இடம்பெற்றுள்ளது.
கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) முடிவு செய்திருந்தது. இதன்படி ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ என பெயரிடப்பட்ட முதல் செயற்கைக்கோள் 2013-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்து ஐஆர்என் எஸ்எஸ்-1பி, 1சி, 1டி,1இ, 1எஃப் ஆகிய 5 செயற்கைக்கோள்கள் குறிப்பிட்ட காலஇடைவெளியில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த திட்டத்தின் இறுதி செயற்கைக்கோள் (7-வது செயற்கைக்கோள்) ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி, இன்றுமதியம் 12.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்துஐஆர்என்எஸ்எஸ்-1ஜி செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. கடல் பகுதிகளின் பாதுகாப்பு, இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை, திசை அறிதல் உள்ளிட்ட கடல்சார்ஆராய்ச்சிப் பணிகளை இந்த செயற்கைக்கோள் மேற்கொள்ளும். முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக