வெள்ளி, 30 செப்டம்பர், 2016

முதுகலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதில் சுணக்கம் காட்டும் ஆசிரியர் தேர்வு வாரியம்: அரசாணை வெளியிட்டு 7 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட்டு 7 மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சுணக்கம் காட்டிவருகிறது ஆசிரியர் தேர்வு வாரியம்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 50 சதவீதம் நேரடி நியமனம் மூலமாகவும், 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. நேரடி நியமனங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், கடந்த ஆண்டு 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட்டன. அந்த காலியிடங்கள் 2013-14, 2014-15-ம் கல்வி ஆண்டுகளில் ஏற்பட்டவை ஆகும்.

இந்நிலையில், 2015-16-ம் கல்வி ஆண்டில் ஏற்பட்ட 2,125 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வி துறை கடந்த 10.2.2016 அன்று அரசாணை (எண் 24) வெளியிட் டது. பதவி உயர்வுக்கு ஒதுக்கப் பட்ட காலியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்ட நிலையில், நேரடி நியமனத்துக்கு ஒதுக்கீடு செய்யப் பட்ட 1,062 காலியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.

அரசாணை வெளியிட்டு 7 மாதங்கள் ஆகியும் இன்னும் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை கூட ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவில்லை.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பள்ளிக்கல்வித் துறை பலமுறை நினைவூட்டல் களையும் அனுப்பிவிட்டது. ஆனாலும், ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேல்நிலைப் பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒர் ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் நிர்ணயிக் கப்பட்டுள்ளது. அந்த அடிப்படை யில் அரசு மேல்நிலைப் பள்ளி களில் புதிதாக 1,600 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களுக்கு பள்ளிக்கல்வித்துறை அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணி யிடங்கள் நிரப்பப்படாதது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாநிலத் தலைவர் வே.மணி வாசகனிடம் கேட்டபோது, "அனு மதிக்கப்பட்ட காலியிடங்களே 2,200-க்கு மேல் இருக்கிறது. ஆசிரியர்-மாணவர் விகிதாச்சார அடிப்படையில் புதிதாக 1600 பணியிடங்களை தோற்றுவிக்க பள்ளிக்கல்வித்துறை ஒப்புக் கொண்டுள்ளது. காலியிடங்கள் விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட வடமாவட்டங்களில்தான் அதிகம் உள்ளன. வடமாவட்டங் களில் தேர்ச்சி விகிதம் குறைவு என்கிறார்கள்.

காலியிடங்களை நிரப்பா விட்டால் தேர்ச்சி விகிதம் எப்படி அதிகரிக்கும்? அரசுப் பள்ளி களில் முதுகலை ஆசிரியர் பணி யிடங்கள் காலியாக இருப்பதால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அனுமதிக்கப்பட்ட காலியிடங்கள், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட காலி யிடங்கள் இரண்டையும் சேர்த்து நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் கூறும் போது, "அரசு மேல்நிலைப் பள்ளி களில் முதுகலை ஆசிரியர் பணிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற் பட்ட காலியிடங்கள் உள்ளன. குறிப்பாக ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் பாட ஆசிரியர்கள் இல்லாததால் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இது போன்று முக்கியப் பாடங்களில் ஆசிரியர் இல்லாவிட்டால் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறையும்" என்றார்.

இதற்கிடையே, அரசுப் பள்ளி களில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளன? என்ற விவரத்தை அனுப்புமாறு அனைத்து பள்ளி களுக்கும் கல்வித்துறை அதிகாரி கள் மூலம் அரசு உத்தரவு பிறப் பித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்ப தால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. எனவே, முது கலை ஆசிரியர் நியமனத்துக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக